இத்தாலியில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 35வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு

இத்தாலி போலோனியா (Bologna) நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களது 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு 09/10/2022 மதியம் 2.30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றல், தேசியக் கொடி ஏற்றல், ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து எழுச்சி நடனங்கள், பேச்சு, கவிதை என்பன போலோனியா, ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களினால் வழங்கப்பட்டது. சமகால அரசியல் தொடர்பாகவும், எமது தேச விடுதலைக்கு ஆற்ற வேண்டிய பணிகள் சார்ந்தும் இத்தாலி மக்களவை பொறுப்பாளர் சிறப்புரை ஆற்றியிருந்தார். இந் நிகழ்வில் ஆசிரியர்கள், இளையோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக வீரவணக்கம் செலுத்தினர். இறுதியில் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது. இந்நிகழ்வின் சில பதிவுகள்.

உங்கள் கவனத்திற்கு