இத்தாலியில் நடைபெற்ற தியாகி பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த துடுப்பாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள்

இத்தாலி மேற்பிராந்திய ஈழத்தமிழர் விளையாட்டுத் துறையினால் 19-06-2022 அன்று தியாகி பொன் சிவகுமாரன் ஞாபகார்த்த துடுப்பாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் ரெச்சியோ எமிலியா பிரதேசத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டத்தைத் தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றலுடன் காலை ஆரம்பமானது. இச் சுற்றுப் போட்டியில் லெப்.கேணல் விக்டர், ரெச்சியோ ஸ்ரார், ஈழவன், அக்கினி, தாய்மண், போலோனியா, ஸ்பாரன்ஸ் ஆகிய விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றின. போட்டிகள் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதியில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் துடுப்பாட்டப் போட்டியில் முதலாம் இடத்தை ரெச்சியோ எமிலியா ஸ்ரார் விளையாட்டுக் கழகம் தமதாக்கி கொண்டது. இரண்டாம் இடத்தை போலோனியா ஸ்பாரன்ஸ் விளையாட்டு கழகமும் மூன்றாம் இடத்தை லெப்.கேணல் விக்டர் விளையாட்டு கழகம் தமதாக்கிக் கொண்டன. அதேபோல் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதலாம் இடத்தை ஈழவன் விளையாட்டுக் கழகம் தமதாக்கி கொண்டது தொடர்ந்து இரண்டாம் இடத்தை அக்கினி விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தை ஈழவன் விளையாட்டுக் கழகமும் தமதாக்கிக் கொண்டன. இறுதியில் தமிழிழ தேசியக்கொடி கையேந்தல் செய்யப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க விடப்பட்ட தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரததுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு