இத்தாலி வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழர் தாயகத்தில் தற்சார்ப்பு பொருளாதார ஊக்குவிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக இத்தாலி வாழ் தமிழ்மக்களின் நிதிப் பங்களிப்பில் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 23/05/2022 அன்று 40 குடும்பங்களுக்கும், அக்கரைப்பற்று 8 ஆம் குறுச்சியில் 26/05/2022 அன்று 60 குடும்பங்களுக்கும், மல்வத்தை, வீரமுனை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களில் 100 குடும்பங்களுக்கு 29.05.2022 ஆகிய நாட்களில் பயிர்விதைகள் மற்றும் நாற்றுக்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது. இவ் உதவியை வழங்கிய இத்தாலி வாழ்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அக்கரைப்பற்று, மல்வத்தை, வீரமுனைப் பிரதேச மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

உங்கள் கவனத்திற்கு