“நாட்டுப்பற்றாளர்” சபாரட்ணம் வாமதேவன்

இத்தாலி பலெர்மோவில் 17.05.2022 அன்று சாவடைந்த, தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் அமரர் சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலகத் தொடர்பகத்தினால் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிக்கப்பட்டு, வீரவணக்க நிகழ்வு 23.05.2022 அன்று காலை 09:00 மணிக்கு நடைபெற்றது. இவ் வணக்க நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் தேசிய செயற்பாட்டாளர்கள், திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினர் கலந்து கொண்டு, பொதுச்சுடர், ஈகைச்சுடர், அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலர்வணக்கம்  செலுத்தப்பட்டு, நாட்டுப்பற்றாளர் என்ற மதிப்பளிப்புடன் எமது தாரகமந்திரம் உறுதிமொழியுடன் இறுதிப்பயணமானது அவரது இல்லத்திலிருந்து குடும்பத்தினர், உறவினர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள், பொதுமக்களோடு திலீபன் தமிழ்ச்சோலை வரை நடைபவனியாகக் கொண்டு செல்லப்பட்டு விடைபெற்றுக் கொண்டார். நாட்டுப்பற்றாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்கள் கவனத்திற்கு