கஞ்சி பரிமாறி நினைவுகூரும் ‘வாகை கல்விநிலையம்’ மாணவர்கள்

உறவை வளர்ப்போம் திட்டத்தால் அமைக்கப்பட்ட வாகை கல்வி நிலையத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் இன்று நடைபெற்றது. 2009இல் முள்ளுக் கம்பிக்குள் இருந்த எமது மக்களை சிறிலங்கா அரசாங்கத்தின் கோரத் தாண்டவம் கொன்று குவித்து, எமது மக்களின் அவலக் குறல் ஒலித்த போதும் சர்வதேச நாடுகள் பாராமுகமாக இருந்தன. 13 வருடங்கள் கடந்தும் எமக்கான நீதி இன்னும் வழங்கப்படவில்லை. பட்டினியில் கையேந்தி நின்ற எம் மக்களுக்கு உப்புக் கஞ்சி தான் அருமருந்தாய் இருந்தது. இன்று வலி சுமந்து இந்த நாளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாகை கல்வி நிலைய மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களுடனும் பரிமாறப்பட்டது. அத்துடன் எம் இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் நாற்பது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

உங்கள் கவனத்திற்கு