தேசமின்றி வாழும்
அடிமையாகிப் போனோம்
பேச மொழியிருந்தும்
வார்த்தையின்றிப் போனோம்!
தீராத சோகத்தை எப்படி எடுத்துரைக்க
சிறந்தோங்கிய எம் இனத்தின் வாழ்வு
சிதறிப் போய்க் கிடக்கு.
தாயை அவமதித்து தாய்நிலத்தில் வீசிவிட்டு                 சேயின் சிற கொடித்தால் செயலிலற்பார் தமிழர் என்று    புத்தனின் வேதப்பேயின் அடம் புரிந்து சரித்திரம் படைத்தோரை சதியினில் விழுத்தி சந்ததியை அழித்து விடவென 
போர் முனைக்கு வந்த சிங்களப் படைக்கு 
மங்களம் பாட எண்ணி மீண்டும் ஒரு போற்ப் பறைக்கு 
முனை மழுங்காது எங்கள் முள்ளிவாய்க்கால்
கால் இழந்தோர் கையிழந்தோர் என்றெல்லாம் வகையாகப் பேசுகின்றோம் நாம் வழிசெய்தோமா?

நாளை இனியொரு விதி செய்வோம் 
இயன்ற வரை அவர்களுக்குப் பணிசெய்வோம்.
கிடங்கில் இருந்த சனம் முடங்கள் பாயும் என்று 
பல தடைகள் தாண்டித் தமிழனாய் வாழ்வது எம் தேசம்,
உடுக்கை இழந்து விட்டு கொடுக்கை வாலைப் பிடித்து வாழும் இடுக்கம் கொண்டதும் எம் தேசம்.
முனை மழுங்காத எம் தேசியமே தேசியத் தலைவனை அன்று இலங்கைப் போர் தொடுக்க அவதாரமாய் வந்தாய் 
பாரதப் போர் முடித்துப் பொருளாய் நின்றாய்!
முகுந்தனாய் அவதரித்து முள்ளிவாய்க்கால் சமர் முடித்தாய்!
வீனர்கள் ஏனோ இன்னும் உன்னை விண்ணில் தேடுகிறார்
மேதகுவின் நாமம் சொல்லி மேதினியில் வாழுகின்ற ஈழத் தமிழர்களுக்கு வேதனைதான் முடிவா என்பர் 
சாதனைகள் படைத்திட்ட சரித்திர நாயகன் நீ 
மீண்டும் வருவாய், 
தோன்றும் தமிழீழம்!

முனைகளைத் தீட்டுங்கள் போர் பறை கேட்கிறது
மரணமும் தாண்டிய தமிழர் நாம்,
மார்புதட்டுகின்ற இனமும் நாம்.
மாற்று மொழி மோகத்தில் மாற்றான கலாச்சார வலையில் சிக்கி மதியிழந்து வாழும் புலம் பெயர் தமிழர்கள் நாம்.
கல்தோன்றும் முன்னே களத்தினில் வெற்றி கண்டு மாற்றான் தேசமதை மண்டியிட வைத்தது எங்கள் தமிழ்.
இனவாதத்தால் வெறிப்பிடித்த இனப்படுகொலைக்காரா
முள்ளிவாய்க்காலில் வெற்றி என்று வின்னூந்தில் வந்திறங்கி முத்தமிட்ட மண்ணில் இன்று உன் இனத்தார் உனைவிரட்ட ஓடிப்பதுங்குகிறாய்.
அரசன் அன்றறுக்க தெய்வம் நின்றறுக்கும் என்ற மொழி பொய்யாகாது.

வெண்சமரில் வெந்த இனம் வஞ்சகத்தால்‌ வீழ்ந்து 13 ஆண்டு ஆனாலும் எம் இனத்தின் வரலாற்றை மக்கள் முன் எடுத்து வைத்து மனத்தின் சார் உறையவைத்து பல்லாண்டு பணி செய்து உலகத்து ஒட்டுமொத்த தமிழராய் ஒற்றுமை எனும் வடம்பிடித்து இந் நாளில் எழுச்சி கொள்வோம்!

உங்கள் கவனத்திற்கு