தமிழினத்தின் வாழ்வுரிமைக்கான மனிதச் சங்கிலிப் போராட்டம்

தமிழர்களுக்கே உரித்தான தமிழர் தாயகம், தேசம், எமது சுயநிர்ணய உரிமையை நாம் அடைவதற்கு இன்று வரை பல விதமான அமைதி வழிப்போராட்டங்களை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்கள் முன்னெடுத்து வரும் இவ்வேளையில், காலத்தின் தேவைக் கருதி, இன்று யேர்மனி நாட்டில் மனிதச் சங்கிலிப் போராட்டம் எமது தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது.

சிங்கள இனவாத அரசினால் இன்று வரை நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும், தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதை முன்வைத்தும் இம் மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களின் இருப்பையும், அடையாளத்தையும் அழித்தொழிக்க நினைக்கும் சிங்கள இனவெறியாட்டத்திற்கு எதிராக, எமது ஈழத்தமிழர்கள் தமிழீழத் தேசியக் கொடியினை தாங்கியவாறு ஈழத்தமிழினத்தின் வாழ்வுரிமைக்கான அறவழிப்போராட்டத்தை முன்னடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு