வாகை கல்விநிலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைத்திருநாள் விழா

“தமிழர் போற்றும் நன்னாளாம், உழவர் போற்றும் பொன்னாள்” தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந் நாளில், தாயகத்திலும் சிதம்கரபுரத்தில், இத்தாலி வாழ் எம் உறவினர்களின் நிதிப்பங்களிப்புடன், கடந்த ஒருவருட காலமாக நடைபெற்று வரும் வாகை கல்வி நிலையத்திலும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந் நாளில், பொங்கலைத் தொடர்ந்து வாகை கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பு நிகழ்வுகளில் ஈடுபட்டு இந் நன்நாளை சிறப்பாகக் கண்டு மகிழ்ந்தனர். இனி வரயிருக்கும் மாதங்களில் கொரோனா தொற்றுநோய் குறையும் பட்சத்தில் வாகை கல்வி நிலையம் மீண்டும் முற்றாகச் செயற்படவுள்ளது.

இனவெறிப்பிடித்த சிங்கள அரசாங்கம் எமது இனத்தின் அடையாளங்களை அழிக்கும் தீவிரமான வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வரும் வேளையில், தைத் திருநாள் மரபை தாயகத்தில் எமது அடுத்த தலைமுறையும் வெகுச் சிறப்பாகக் கொண்டாடுவதும் எமது போராட்ட காப்பியத்தில் எழுதப்படும் வரலாறு தான்.

உங்கள் கவனத்திற்கு