OMICRON மாறுபாடு: உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனாவைரசு

நவம்பர் 26 அன்று, உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆனது B.1.1.529 என்ற புதிய வகை கொரோனாவைரசை இனம்கண்டுள்ளது. அதற்கு OMICRON என்ற பெயரிட்டுள்ளது.

நவம்பர் 11 அன்று Botswana இல் மற்றும் நவம்பர் 14 அன்று தென்னாப்பிரிக்காவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவைரசு முதலில் கண்டறியப்பட்டது.

Delta உட்பட மற்ற உருமாற்றமடைந்த வைரசுகளை விட Omicron அதிகமாக பரவக்கூடியதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தென்னாப்பிரிக்காவில் Omicron ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிக தொற்றுப் பரவலுக்கான காரணம் துல்லியமாக Omicron அல்லது பிற காரணிகள் வைரசின் சுழற்சியை பாதித்ததா என்பதைப் புரிந்து கொள்ள தொற்றுநோயியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

மேலும், மற்ற வகைகளை விட Omicron தொற்று மிகவும் தீவிரமான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கு இன்னும் எந்த ஆதாரமும் இல்லை எனவும், தென்னாப்பிரிக்காவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக ஆரம்ப தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இது Omicron உடனான குறிப்பிட்ட தொற்றுநோயைக் காட்டிலும் பொதுவாக கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாறுபாட்டுடன் தொடர்புடைய குறிப்பிட்ட அறிகுறிகள் மற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன என்று தற்போது எந்த தகவலும் இல்லை. Omicron ஆல் ஏற்படும் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையைப் புரிந்து கொள்ள சில காலநேரம் எடுக்கும். எவ்வாறாயினும், தற்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் Delta உட்பட Covid-19 இன் அனைத்து வகைகளும் கடுமையான நோய் அல்லது மரணத்தை ஏற்படுத்தலாம். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மேலும், PCR பரிசோதனை மூலம் இந்த வைரசினை கண்டறியமுடியும் எனவும் அறிவித்துள்ளது.

தற்போது பல நாடுகளில் இத் தொற்று பரவிவரும் நிலையில், இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் சில ஆபிரிக்க நாடுகளுக்கு செல்வது மற்றும் வருகைகளை தடைசெய்து வருகின்றன.

உங்கள் கவனத்திற்கு