SUPER GREEN PASS என்றால் என்ன?
கொரோனாத் தொற்றுநோயின் நான்காவது அலைக்கான தீர்வு காண புதிய எதிர்ப்பு நடவடிக்கைகள் அடங்கிய புதிய ஆணை நவம்பர் 24 அன்று அமைச்சர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.
அவ் ஆணையின் படி, டிசம்பர் 6, 2021 முதல் SUPER GREEN PASS எனும் புதிய சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தடுப்பூசி போடப்பட்ட மற்றும் Covid-19 லிருந்து குணமடைந்தவர்களுக்கு வழங்கப்படும் இன்னுமொரு சான்றிதழாகும். மேலும், இந்த SUPER GREEN PASS சனவரி 15 2022 வரை நடைமுறையில் இருக்கும்.
பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், bar, discoteca, உணவகங்கள், மற்றும் விழாக்கள் ஆகியவை வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பகுதிகளில் சூப்பர் SUPER GREEN PASS வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். செம்மஞ்சள் நிறப் பகுதிகளில் இச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு மட்டுமே சில சட்ட வரம்புகள் பொருந்தும்.
மேலும், GREEN PASS இன் செல்லுபடியாகும் காலம் 12 இல் இருந்து 9 மாதங்கள் வரை குறைகிறது.
SUPER GREEN PASS என்றால் என்ன?
SUPER GREEN PASS என்பது, தடுப்பூசி போடப்பட்டு, அல்லது Covid-19 இல் இருந்து மீண்டு வருபவர்களுக்கான வலுவூட்டப்பட்ட பச்சை சான்றிதழாகும். மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் நிறப் பகுதிகளில் வசிப்பவர்கள் இதை வைத்திருப்பதன் மூலம் அப் பகுதிகளில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட தடைகளைத் தவிர்க்க அனுமதிக்கிறது. எனவே, இது சமூக வாழ்க்கையில் அதிக சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
SUPER GREEN PASS எதை அனுமதிக்கிறது? பொது நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், bar, discoteca மற்றும் விழாக்களுக்கு SUPER GREEN PASS வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் (தன்னிறைவு இல்லாத மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பவர்களைத் தவிர்த்து). செம்மஞ்சள் நிறப் பிரதேசங்களால் கடந்து செல்வதற்கு எந்த கட்டுப்பாடுகளும், வரம்புகளும் இல்லை. 6 டிசம்பர் 2021 முதல் ஜனவரி 15, 2022 வரை வலுவூட்டப்பட்ட SUPER GREEN PASS வெள்ளைப் பிரதேசங்களிலும் பயன்படுத்தப்படும். வேலை இடங்கள், பொது போக்குவரத்து, உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்களில் super green pass அவசியமில்லை. இவற்றுக்கு Green Pass அல்லது Tampone போதுமானது.