இத்தாலியில் நடைபெற்ற ஆசிரியர் செயலமர்வு

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் மீளாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ள மேம்படுத்தப்பட்ட பாடநூல்கள் தொடர்பான ஆசிரியர்கள் செயலமர்வு
05.09.2021 அன்று யெனோவா திலீபன் தமிழ்ச் சோலையிலும், இன்று03/10/2021 ரெச்சியோ எமிலியாவிலும் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றது. இச் செயலமர்வில் மேம்படுத்தப்பட்ட பாடநூல்கள் பற்றிய விளக்கங்கள், கற்பித்தல் அணுகுமுறைகள், மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான கற்பித்தல்முறைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய செயலமர்வு முதற்கட்டமாகவும் அதனைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கணம், ஈழத்தமிழர் வரலாறு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு
செயலமர்வு நடைபெற்றது. இதில் யெனோவா,
நாப்போலி, பியல்லா ,ரெச்சியோ எமிலியா ,போலோனியா ஆகிய பிரதேசங்களிலிருந்து கணிசமான ஆசிரியர்கள், கல்விச்சேவைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேம்படுத்தப்பட்ட பாடநூல்கள் பற்றிய ஆழமான தரமான விளக்கங்கள் பகிரப்பட்டன. இன்றைய செயலமர்வானது கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கு நிறைவாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது.

உங்கள் கவனத்திற்கு