தேசத்தின் புயல்கள் நினைவேந்தல் – இத்தாலி 2021

மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள். பல ஆண்டுகளாக எதிரியின் மத்தியில் உலவி, தேசிய விடுதலையை மட்டுமே தமது தாரக மந்திரமாக தமக்குள் சுவாசித்து தமது இறுதி இலக்கில் உறுதி தளராமல், தமது பாதையில் எத்தடை வரினும் அதை உடைத்தெறிந்து தமது கடமையை செய்த நெருப்பு மனிதர்கள். இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும், உலகத் தமிழர்களிடமும் உள்ளிருந்து இயங்கும் பெரும் விடுதலை சக்தியாக செயற்படுகிறது என்றால் அது மிகையாகாது! “பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”, இது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் கூற்று. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் வீரவரலாறு உள்ளது. சாவிற்கு நாள் குறித்து தாயக விடுதலைக்காய் கந்தக காற்றை விருப்புடன் சுமந்த வீரகாவியர்கள் கரும்புலிகள்!

முதல் தரைக் கரும்புலித் தாக்குதலை 1987 யூலை மாதம், 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான கரும்புலி கப்டன் மில்லர் கரும்புலித் தாக்குதலை நடத்தினார். இன்றுடன் கரும்புலிகளின் தியாக வரலாறு தொடங்கப்பட்டு 34 ஆண்டுகளாகின்றன. அந்தவகையில் கரும்புலி வீரர்களுக்காக
அவர்களை நினைவில் ஏந்தி இன்று (10/7/21) சனிக்கிழமை ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் கரும்புலிகள் நாள் நினைவுகூரப்பட்டது. எழுச்சியடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுடர்வணக்கம், மலர்வணக்கம் செய்யப்பட்டு, திலீபன் தமிழ்ச்சோலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் கவிதை, பேச்சு என நிகழ்வில் எழுச்சியுடன் பங்கேற்றனர். அதேபோல் பியல்லா பிரதேசத்திலும் போதுச்சுடரேற்றல் தேசியக் கொடியேற்றல் ஈகைச்சுடரேற்றல் அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் செய்யப்பட்டு திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதை, பேச்சு, நடனம், நாடகம் என நிகழ்வுகள் எழுச்சியுடன் நடைபெற்றதன் சில பதிவுகள்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உங்கள் கவனத்திற்கு