இத்தாலியில் தமிழ் கடடமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இணையவழி மகாநாடு

“பெரு மதிற்பிற்குரிய எம் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமக்கு முடிவல்ல, உணர்வுள்ள தமிழராய் உரிமைக்காய் தொடர்ந்து போராடுவோம்.”

ஐ.நா. மனித உரிமைகள் 46வது கூட்டத்தொடரில் இறுதியாக வந்த தீர்மானமானது, சிறிலங்காவுக்கு தமிழர் நிலங்களை சிங்களமயப்படுத்தல் மற்றும் வல்வளைப்பு போன்றவற்றை மேலும் அதிகரிப்பதற்கான அதன் திட்டமிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக மேலும் 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதைப்போலவே தமிழ் மக்களின் பார்வையாகவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது, போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கையில், தன்னிடமிருந்த தகவல்களான “படையினரின் வலிந்ததாக்குதல்” மற்றும் அதன் திட்டமிட்ட பட்டினிக்குப் பலிகொள்ளவைக்கும் நடவடிக்கைகளின் போது பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் பொறிவைக்கப்பட்டிருந்தமை, உண்மையான உயிர்ச் சேதங்கள் குறித்த மற்றும் “போர் தவிர்ப்பு வலயங்களுக்குள்” குண்டுபோட்டமை குறித்த தகவல்களை வெளியிட்டிருக்குமேயானால், இந்த தகவல்கள் சர்வதேச மனிதாபிமான சக்திகளை போர் முனைப்புக்கு எதிராக அணிதிரட்டுவதற்கு ஏதுவாக அமைத்திருக்கும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வரும் தீர்மானங்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக வழிப்படுத்தாமல், மாறாக சிறிலங்கா அரசு படை உந்தல் மூலம் சிங்கள குடியேற்றமயமாக்கல், நிலங்களை கையகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை தொடர்ந்து செய்வதற்கு கால அவகாசம் வழங்கிக்கொண்டு, அதேவேளை களம், புலம்பெயர் தமிழர்களை செயலிழக்கச் செய்வதற்கான ஒரு அதி நவீன அரசியல் முன்னகர்வாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது.

இனப்படுகொலையை மறுப்பதே ஒரு குற்றம்! போர் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்தும் எமக்கு இடம் பெற்றதும், தொடர்ந்து இடம்பெறுவதும் கட்டமைக்கப்பட்ட ஓர் இன அழிப்புத் தான் என்பதை இந்த சர்வதேசம் ஏன் ஏற்க மறுக்கின்றது? இதற்கு என்ன தீர்வு? எமக்கான நீதியினை நாம் எப்படி பெறுவது? எமது நீதிக்கான தீர்விற்கு சர்வதேசத்தை நாம் எப்படி அணுகுவது? தொடர்ந்தும் ஐ.நா வை நம்பி இருப்பதா அல்லது மாற்று வழி என்ன? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பொருட்டு எதிர்வரும் 12.05.2021 புதன்கிழமை மாலை ஐரோப்பிய நேரம் 17:00, ஐக்கிய இராச்சிய நேரம் 16:00,கனேடிய நேரம் 11:00 மணிக்கு “GoToMeeting” https://global.gotomeeting.com/join/574760077 என்ற இணையவழி ஊடாக கடந்த பல வருடங்களாக எம் இனத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த இத்தாலிய மாநகர முதல்வர்கள், பேராசிரியர்கள், சடடத்தரணிகள், பத்திரிகையாளர்களுடனான சந்திப்பு இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். தயவு செய்து அனைவரும் இதில் கலந்து கொள்ளவும். நன்றி

“ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு, எமது மக்களின் விடிவிற்காக உலகத்தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும்.” – தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன்.