இத்தாலிய தூதுவராக இனப்படுகொலைக் குற்றவாளி சுமங்கல டயஸ் நியமனம்

27 ஏப்ரல் 2021 அன்று, உயர் பதவிகள் தொடர்பான இலங்கையின் பாராளுமன்றக்குழு, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படை மார்சல் சுமங்கல டயஸை இத்தாலிக்கான தூதராக நியமித்தது.

நவம்பர் 2020 இல், அவர் கனடாவில் இராஜதந்திர உறவுகளுக்கான உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார், ஆனால் கனடாவாழ் தமிழ் சமூகத்தின் அழுத்தம் மற்றும் டயஸ் செய்த குற்றங்கள் காரணமாக, கனேடிய அரசாங்கம் அவரை நியமிக்க மறுத்துவிட்டது.

டயஸ் தனது பதவி மூலம் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

2008-2009 ஆம் ஆண்டில், இலங்கையில் இறுதி கட்ட ஆயுத மோதலின் தலைமை விமான ஒருங்கிணைப்பாளராகவும், தளபதியாகவும் டயஸ் பதவியாற்றியுள்ளார். சிறிலங்கா விமானப்படையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சுமங்கல டயஸ் “சிறிலங்கா இராணுவத்தின் 57, 58, மற்றும் 59 பிரிவுகளின் தரைவழி நடவடிக்கைகளுடன் விமான நடவடிக்கைகளை ஒத்திசைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்“. மேலும், “ஒரு மனிதாபிமான நடவடிக்கை மற்றும் முப்பது ஆண்டுகளாக இலங்கையை பாதித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் அவர் ஒரு பங்கேற்பாளர் என்றும் வெற்றியில் அவரது பங்களிப்பு தீர்க்கமானதாகவும் இருந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமும் அவர்களது அதிகாரிகளும் விவரிக்கையில், 2009 ல் நடந்த போரில் எந்த வகையிலும் ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக இருக்கவில்லை. உண்மையில், இது எதிர்மாறாகவே இருந்தது.

குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபை இதை “கற்பனை செய்ய முடியாத மனிதாபிமான பேரழிவு” என்று விவரித்தது.

அப் போரின் போது தமிழ் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், No-Fire Zone என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் போர்ப் பகுதிகளில் இயங்கி வந்த ஐ.நா மனிதாபிமான மையங்கள் மீது குண்டுவீச்சுகள், உணவு விநியோகம் மற்றும் பாதிக்கப்பட்டோர்களை மீட்க்கும் பணியிலிருந்து செஞ்சிலுவை சங்கத்தை தடுத்து நிறுத்தியது போன்ற குற்றங்களுக்கும் சிறிலங்கா விமானப்படையின் பங்களிப்பு நீர்த்தியாகவே இருந்தது.

தமிழ் இனப்படுகொலையில் இலங்கை விமானப்படையின் பங்கு

சிறிலங்கா விமானப்படையில் டயஸின் ஈடுபாடு அவரை நேரடியாக போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் சித்திரவதை ஆகியவற்றில் குறிக்கிறது. மோதலின் இறுதி கட்டத்தில் விமானப் படைகள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டன.

2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் அதிகாரிகள் (OISL – OHCHR விசாரணை) அறிக்கையின்படி, சிறிலங்கா விமானப்படை பின்வரும் குற்றச்சாட்டுகளின் பட்டியலில் (இது முழுமையான பட்டியல் இல்லை) ஈடுபட்டுள்ளது:

  • சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து 2008 டிசம்பரில் கிளிநொச்சி மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டது;
  • ஏப்ரல் 2009 இல் அதே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட “No-Fire Zone” வடக்குப் பகுதியின் கிழக்கு கடற்கரையோரங்களில் கடும் வான்வழி குண்டுதாக்குதல்கள்;
  • ஏப்ரல் 21, 2009 அன்று வலயன்மடம் மருத்துவமனையில் விமான குண்டுவீச்சு;
  • ஏப்ரல் 8, 2009 அன்று ஒரு மருத்துவமனை மீது வான்வழி குண்டுதாக்குதல். குழந்தைகளுக்கான பால்த்தூள் விநியோகத்தின் போது குண்டுத்தாக்குதல் நிகழ்ந்தது. அத் தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்;
  • முள்ளிவாய்கல் மருத்துவமனை மையம் மீது ஏப்ரல் 28, 2009 அன்று குண்டு வீசப்பட்டது.

சுமங்கல டயஸின் பங்கு

சுமங்கல டயஸ், மேலே குறிப்பிட்டுள்ள தாக்குதல்களில் ஈடுபட்டவர் மற்றும் பொறுப்பானவர், இன்னும் பல. சிறிலங்கா இராணுவத்தின் 57, 58 மற்றும் 59 வது படைப்பிரிவுகளுடன் டயஸ் கூட்டாக பணியாற்றியதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தளங்கள் கூறுகின்றன. இந்த பிரிவுகள் நேரடியாக இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் தமிழ் பொதுமக்களுக்கு எதிரான சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் கண்மூடித்தனமான குண்டுதாக்குதல்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவை.

கோட்டபாய ராயபக்ச அரசாங்கத்தின் கீழ் உயர்மட்ட இராணுவ பதவிகளை வகித்து சிறிலங்கா விமானப்படையின் மார்சலாக பதவியாற்றிய சுமங்கல டயஸ், நூறாயிரக்கணக்கான தமிழர்களை அழித்ததில் பெரும் பங்காற்றியுள்ளார் .

இத்தாலி தூதுவராக சுமங்கல டயஸின் நியமனம் மனித உரிமைகள் மற்றும் இத் துறையில் இத்தாலியின் பங்கை அவமதிப்பதே ஆகும்.

எனவே, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இத்தாலியில் சுமங்கல டயஸை விசாரித்து வழக்குத் தொடர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுகிறோம். மாற்றாக, அவரின் இத்தாலி வருகை மற்றும் தூதர் பதவிக்கான அங்கீகாரம் மறுக்கப்பட வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு