ஜெனோவா நகரில் நடைபெற்ற தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் வணக்க நிகழ்வு

விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையை நாம் ஒருநாளும் மறந்திடவோ மறுத்துடவோ முடியாது.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாக தியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று கோரி மட்டக்களப்பை சேர்ந்த திருமதி பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.(19/4/88) அன்றைய தினம் தாய்நாட்டுக்காக தன்னுயிரை அகிம்சையின் மூலம் ஈந்தார். தியாக அன்னையின் நினைவுகூரல் ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் (25/4/21) அன்று கொரோனா நோய்த்தொற்று நடைமுறைக்கு அமைவாக நினைவு கூரப்பட்டது.

உங்கள் கவனத்திற்கு