சிங்கள பேரினவாத தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணம்

பேரினவாத சிங்கள அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது. சிங்கள பொலிசார் வீதி தடைகள் போட்டு துப்பாக்கி முனையில் மிரட்டி அடக்க நினைத்த போதிலும் பேரணி தொடர்கிறது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று(03) காலை 9.40 அளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஆறாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
நில அபகரிப்பு, மத அடையாளங்களை அழித்தல், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமானது பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் பலருக்கு நீதிமன்ற தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்களிடமிருந்த பதாதைகளை பறிக்க பொலிசார் முயன்றபோது, அவர்களை தள்ளிவிட்டு பேரணி முன்னகர்ந்தது. பொலிசார் வீதித்தடைகளை அமைத்த போது, அதையும் உடைத்தெறிந்து தமிழினத்தின் நீதிக்கான பயணம் தொடர்கிறது.

உங்கள் கவனத்திற்கு