Cashback Natale எனும் புதிய திட்டம்

நத்தார் விற்பனைகளை ஊக்குவிப்பதற்காக “Italia cashless” திட்டத்தின் முதலாவது அம்சமான “Cashback Natale”ஐ தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது: டிசம்பர் 8 முதல் 31 வரை டெபிட் (debit) மற்றும் கிரெடிட் (credit) அட்டைகளுடன் எவ்வித பொருட்களும் வாங்குபவர்கள் (உணவு, நத்தார் பரிசுகள்) 10% சதவிகிதம் (அதிகபட்சம் 150 யூரோக்கள் வரை) செலவினங்களை திருப்பிபெற்றுக்கொள்ள முடியும். செலவினங்களின் “மதிப்பு” எதுவாகவும் இருக்கலாம். இருப்பினும், 10% cashback என்பது ஒவ்வொரு வாங்குதலுக்கும் 15 யூரோக்கள், மொத்தம் 150 யூரோக்கள் வரை மட்டுமே திரும்பப்பெற முடியும். உதாரணத்திற்கு, நீங்கள் 250 யூரோக்களை செலவிட்டால், அந்தத் தொகையில் 15 யூரோக்கள் மட்டுமே திரும்பக் கிடைக்கும். இவ்வாறு, 150 யூரோக்கள் வரை திரும்பப் பெற்றதும், இது நிறுத்தமடையும்.

எவ்வாறு இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்?

  • SPID அல்லது மின்னணு அடையாள அட்டை (Carta d’identità elettronica) இருக்க வேண்டும்.
  • IO” எனும் செயலியை (app) தொலைபேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். டிசம்பர் 7 முதல் செலவினங்களுக்கு பாவிக்க இருக்கும் அட்டைகளை IO செயலியில் பதிவு செய்ய முடியும்.
  • கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பணத்தைத் திரும்பப் பெற விரும்பும் அட்டையின் Iban குறியீட்டைச் சேர்க்க வேண்டும். மேற்கொள்ளும் செலவினங்களை செயலியில் பார்வையிட முடியும்.
  • அட்டைகள் இயக்கப்பட்டதும், 31 டிசம்பருக்குள் மின்னணு கொடுப்பனவுகளுடன் 10 கொள்முதல்களாவது செய்யப்பட வேண்டும். அடுத்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதியில் 50 கொள்முதல்களாவது செய்யப்பட வேண்டும். மேலும், “சேமிப்புகளை” கட்டுப்படுத்தும் ஒரு செலவு உச்சவரம்பு இருந்தாலும், சுட்டிக்காட்டப்பட்ட 6 மாதங்களில் அதிக கொள்முதல்களை மேற்கொள்ளும் ஒரு லட்சம் நபர்களுக்கு ஒரு வகையான “கூடுதல் பரிசு” அல்லது 1,500 யூரோக்களை திரும்பப் பெற முடியும்.

IO” செயலியை தரவிறக்கம் செய்ய 👉 https://io.italia.it/ 👈

உங்கள் கவனத்திற்கு