இத்தாலி மேல்பிராந்திய தமிழ் மொழித்தேர்வு 2020

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தில் நடாத்தப்படும் அனைத்துலகத் தேர்வானது கடந்த யூன் மாதம் கொறோணா நோய்த்தொற்று கரணியமாக நடைபெறவில்லை என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் புதிய கல்வியாண்டிற்குள் மாணவர்களை கொண்டு செல்லும் நோக்கில் யூன், யூலை மாதங்களில் இத்தாலி மேற்பிராந்திய தமிழ்க் கல்விச்சேவையால் வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 9 வரையான மாணவர்களுக்கு புலன்மொழி வளத்தேர்வுடன் பாடநூல் தொடர்பான வினாக்களையும் இணைத்து முழுமையான ஆண்டுத்தேர்வாக இணையவழி மூலம் நடாத்தப்பட்டது. அத்துடன் வளர்தமிழ் 10,11 மற்றும் 12 மாணவர்களுக்கான புலன்மொழி வளத்தேர்வும் இணையவழியில் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று 10/10/2020 சனிக்கிழமை புலன்மொழி வளத்தேர்வு மட்டுமே நடைபெற்றது, அனைத்துலகப் பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில் எழுத்துத் தேர்விற்காக காத்திருந்த வளர்தமிழ் 10,11 மற்றும் 12 மாணவர்களுக்கான அனைத்துலகப் பொதுத் தேர்வானது  உலக நாடுகள் பலவற்றிலும், இத்தாலி நாட்டில் அனைத்துப் பிரதேசத் திலீபன் தமிழ்ச் சோலைகளிலும் நடைபெற்றது.

உங்கள் கவனத்திற்கு