“உறவை வளர்ப்போம்” திட்டம்

அன்பார்ந்த உள்ளங்களே!

கொரோனாவைரசு தாக்கம் காரணமான தடங்கல்களை கடந்து எமது தாயக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேகமாக பணியாற்ற வேண்டியுள்ளது. அந்த வகையில் 2019 மாவீரர் வாரத்தில் ஆரம்பித்த உறவை வளர்ப்போம் திட்டத்தின் ஊடாக சேர்க்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் கொரோனா காரணமாக அனுப்புவதில் தடங்கல்கள் உள்ளது, சரியான சூழல் ஏற்படும்போது விரைவாக அனுப்பி வைக்கப்படும். இதன் இரண்டாம் கட்டமாக எல்லை ஓர கிராமங்களில் 100 – 150 பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் மீட்டல் வகுப்பு நடாத்துவதற்கு ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. இத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு உங்கள் அர்ப்பணிப்பு நிறைந்த செயற்பாட்டை வழங்குவீர்கள் என எதிபார்க்கிறோம். திட்டம் தொடர்பான அனைத்து விடயங்களும் உங்கள் பிரதேச பொறுப்பாளர்கள் ஊடாக அறியத்தரப்படும். நன்றி.

உங்கள் கவனத்திற்கு