கோல்புறூக் அரசியற் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு – டீ.எஸ் சேனநாயக்காவின் விடுவிப்பு

கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் சட்டசபைக் கட்டமைப்பு.

1916 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் டீ.எஸ்.ஜெயவர்த்தனா என்னும் சிங்களவருடன் போட்டியிட்டு சேர். பொன். இராமநாதன் இரண்டாம் முறையும் வெற்றி காண முடிந்தது. 1915இல், சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு பல முஸ்லிம்கள் உடல், உடைமை வழியாகப்பாதிக்கப்பட்ட போது, பிரித்தானிய அரசு தனது இரும்புக்கைகளால் அக்கலவரத்தை அடக்கி, சிங்களவர் பலரைச் சுட்டுக்கொன்று, பலரைச் சிறைக்குள்ளே தள்ளியது. அவ்வகையிற் சிறைப்பட்டவர்களில் முதன்மையானவர் இலங்கையின் முதலாவது பிரதமராகப் பிற்காலத்திலே தெரிவு செய்யப்பட்ட டீ.எஸ் சேனநாயக்கா ஆவார். தேசிய ஒற்றுமை வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த சேர். பொன். இராமநாதன் இங்கிலாந்து வரை சென்று சிறைப்பட்ட சிங்களத் தலைவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவித்தார். இந்த நன்றிக் கடனுக்காக டி. எஸ். சேனநாயக்கா உட்பட்ட தலைவர்கள், இங்கிலாந்தில் இருந்து கொழும்புத் துறைமுகத்தில் வந்து இறங்கிய இராமநாதனைத் தேரில் குதிரை வண்டியில் ஏற்றி, அங்கிருந்து அவரது வீடுவரை வடம்பிடித்து இழுத்துச் சென்று தம் நன்றியுணர்வினைத் தெரிவித்துக் கொண்டனர்.

தேர்தல் பரப்புரை 1911
இராமநாதன் வெற்றிக்காக தேர்தல்பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் சிங்களமக்கள்.
ஜே.ஆரின் பெரியதகப்பன் விகடர் ஜெயவர்த்தனா இராமநாதனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்

இதே டீ.எஸ்.சேனநாயக்கா தான் பிற்காலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் சிற்பியாகி, தமிழ் மக்களின் தாயக நிலம் விழுங்கப்பட முதலடி எடுத்துக் கொடுத்தவர்.

சேர் போன் இராமநாதனை குதிரை வண்டியில் ஏற்றி இழுத்துச் சென்ற சிங்களத் தலைவர்கள். (டீ.எஸ்.சேனநாயக்கா, ஈ.டபிள்யூ.பெரேரா, பாரன்.ஜெயதிலக, ஏ.இ. குணசிங்க ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.)

1921 இல் இருந்து 1924 வரை நடைமுறையில் இருந்தது மானிங் அரசியற் சீர்திருத்தம் இதில், அலுவல் சாரா உறுப்பினர் தொகை 23ஆகக் கூட்டப்பட்டது. நியமன, இனவாரி, பிரதேசவாரி, உறுப்புரிமைகளை ஒரே நேரத்தில் இவ் அரசியற் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தியது. இந்தப் பிரேசவாரிப் பிரதிநிதித்துவமே பிற்காலத்தில் தேர்தல் மாவட்டங்களும் தேர்தல் தொகுதிகளும் உருவாகக் காரணமாயிற்று.

சிங்களத் தலைவர்கள் சேர் போன் இராமநாதனை குதிரைவண்டியிலேற்றி கொழும்பு நகரவீதியில் இழுத்துச் செல்லும் காட்சி.

உங்கள் கவனத்திற்கு