லெப்.கேணல் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு இத்தாலி தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம்

தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அனைத்துலக இளையோர் அமைப்பின் திட்டமிடலில் தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி, தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்கள் உண்ணா நோன்பிருந்த நான்காம் நாளை நினைவுகூர்ந்து 12 மணித்தியாலங்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் நடாத்தினர்.

ஏன் இந்த 12 மணித்தியாலங்கள் என்றால், தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்த அந்த 12 நாட்களை குறித்து நடத்தப்பட்டது. இதனூடாக அவர் பன்னிரண்டு நாட்கள் எப்படி வேதனைப்பட்டு தனது இலட்சிய பற்றையும், தான் நேசித்த மக்களையும், தேசியத்தலைவர் மீது கொண்ட நம்பிக்கையும் உள்வாங்கி தன்னை ஆகுதி ஆக்கினார் என்பதை உணர்வுபூர்வமாக தெரிந்து கொண்டார்கள். இதில் பெரும்பாலானவர்கள், குறிப்பாக இத்தாலியில் பிறந்து வளர்ந்தவர்கள் முன்வந்து இதனை செய்தது வரலாறு எமக்கு வழிகாட்டியாக உள்ளது என்பதை தெளிவுபடுத்துகின்றது. இன்றைய எமது இளையோர்கள் தெளிவான உணர்வாளர்களாகவும், தேசப்பற்றாளர்களாகவும் இருப்பது என்பது நாம் எமது தேசத்தை மீட்கும் வரை எமது போராட்டம் முடிவுறாது, தலைமுறை, தலைமுறையாக பயணிக்கும் என்பதனை எடுத்துக் காட்டுகின்றது.
அதுமட்டுமல்லாமல் தமது 12 மணித்தியால உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி நிறைவு செய்தனர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உங்கள் கவனத்திற்கு