ஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற மனித நேய ஈருருளிப்பயணம்

ஐ.நா நோக்கி 9ம் நாளாக தொடர்கின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் Belgium, Luxembourg நாட்டினை கடந்து Germany நாட்டின் எல்லையை வந்தடைந்தது.

வரும் வழியில் நேற்றைய தினம் அரசியற் சந்திப்புக்களையும் மேற்கொண்டு, இன்றைய தினம் (12/09/2020) Germany நாட்டின் எல்லையினை வந்தடைந்தது. நாளை 13/09/2020 Remich ஊடாக Saarbrücken மாநகரசபை அரசியற் சந்திப்பினை நோக்கி விரைகின்றது. எவ்விடர் வரினும் தொடர்ந்தும் திட்டமிட்டபடி France நாட்டினை ஊடறுத்து Swiss, Geneva மாநகரில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை) வந்தடையும் என்பது திண்ணம்.

போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் நாம் கொண்ட இலட்சியத்தின் நோக்கம் மாறாது.
-தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

உங்கள் கவனத்திற்கு