இத்தாலியில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் 2020

தமிழினத்திற்கு பெருமை சேர்த்த கரும்புலிகள் நாள் யூலை 05, 1987 ஆம் ஆண்டு. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் கரும்புலிகள் என்னும் போர் வடிவம் அறிமுகம் செய்யப்பட்ட நாள் இது. இந்நாளில் “ஒப்ரேசன் லிபரேசன்” (Operation Liberation) நடவடிக்கைக்கு எதிராக முதற் கரும்புலி கப்டன் மில்லரினால் நெல்லியடியில் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டது. இந்நாளை அனைத்து கரும்புலிகளுக்குரிய வீரவணக்கம் செலுத்தும் நாளாக பிரகடனப் படுத்தப்பட்டது.

அவ்வகையில், யூலை 05, 2020 அன்று 33 ஆவது ஆண்டு நினைவேந்தல் Genova, Biella திலீபன் தமிழ்ச்சோலைகள் மற்றும் Palermo தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்திலும் வீரவணக்க நிகழ்வுகள் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகி கவிதைகள், பேச்சுக்கள், நடனங்கள், பாடல்கள் என திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் பங்குகொண்டு உணர்வுபூர்வமாக கரும்புலிகள் தியாகங்கள் நினைவுகூரப்பட்டது. அவற்றில் சில பதிவுகள் இங்கே.

உங்கள் கவனத்திற்கு