இத்தாலியில் விமானங்களில் பயணப் பைகளுடன் இருக்கைக்குச் செல்ல தடை

ஜூன் 11 அன்று அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிரதமரின் ஜூன் மாத ஆணையின் அடிப்படையில், இத்தாலி, கையில் எடுத்துச் செல்லும் பைகள் (bagaglio a mano) மற்றும் பிற பைகளை விமானத்திற்குள் எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது.

இந்த விதி இத்தாலிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களையும் உள்ளடக்குகிறது. மேலும், ஜூன் 26 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த நடவடிக்கையை தேசிய சிவில் விமான அமைப்பான ENAC ஆல் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் IATA க்கு அனுப்பிய கடிதத்துடன் விமான நிறுவனங்களுக்கு தகவல் வழங்கியுள்ளது. எனவே, இத்தாலியில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

ஜூன் 26 நள்ளிரவு முதல், இத்தாலிக்கு வரும் பயணிகள் மற்றும் இத்தாலியில் இருந்து புறப்படும் பயணிகள் இனி ஒரு கைப்பெட்டி (trolley) அல்லது கைப்பையை இருக்கைக்கு மேல் உள்ள பகுதியில் வைக்க முடியாது. விமானத்தில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் இருக்கும் இடத்தில் வைக்கக் கூடிய, தனிப்பட்ட உடமைகள், சிறிய பைகளை (borse/zainetti) மட்டுமே கொண்டு வர முடியும்.

“சுகாதார காரணங்களுக்காக, இருக்கைகளின் மேலுள்ள பகுதிகளின் பயன்பாடு அனுமதிக்கப்படாது” என ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கையில் எடுத்து செல்லும் பயணப் பெட்டிகள் மற்றும் பைகள் இருக்கையின் மேலுள்ள அறைகளுக்குள் வைக்கப்படாமல் ஏனைய பெரிய பயணப் பைகள் போலவே விமானத்தின் கீழ் பகுதிக்குள் அனுப்பிவைக்கப் படலாம்.

உங்கள் கவனத்திற்கு