அனைத்து மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளையும் ஒப்பிடும் பொது இணையப் பதிவகம்

மின்சாரம் மற்றும் எரிவாயு சலுகைகளை ஒப்பிடும் ஒரு புதிய சேவை. இது மின்சக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஒழுங்குமுறை ஆணையமான Areraவால் கண்காணிக்கப்படுகிறது. இது ஒரு பொது நிறுவனம், போட்டி ஆணையால் (decreto concorrenza) விதிக்கப்பட்டுள்ள சட்டத்திற்கு ஏற்பவும், அதிகபட்ச பாதுகாப்பான சந்தையின் எதிர்காலத்தையும் நோக்காகக் கொண்டும் செயல்படுகிறது .

நுகர்வோரைப் பொறுத்தவரை, Areraவின் www.ilportaleofferte.it க்கும் பிற ஒப்பீட்டு தளங்களுக்கும் இடையில் இரண்டு வேறுபாடுகள் உள்ளன:

  1. இந்த கருவியில், மிகப்பெரியது முதல் சிறியது வரை, அனைத்து மின்சாரம் மற்றும் எரிவாயு சேவைகளை வழங்குபவர்கள், சட்டப்படி அவர்களின் அனைத்து சலுகைகளையும் பதிவேற்ற கடமைப்பட்டுள்ளனர். அவற்றை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளவும் வேண்டும்;
  2. இந்த தளத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையில் வணிக ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை. இன்று இந்த இணையப் பதிவகம் எரிசக்தி சந்தையில் 500 க்கும் மேற்பட்ட சேவையாளர்களையும், எரிவாயு சந்தையில் சுமார் 400 க்கும் மேற்பட்ட சேவையாளர்களையும் ஒப்பிடுகிறது.

Areraவின் ஒப்பீடு எவ்வாறு செயல்படுகிறது

இந்த இணையப் பதிவகத்தை அணுகி உங்கள் நுகர்வு தரவையும் (உங்களிடம் ஒன்று இருந்தால்) அல்லது புதிய சேவைக்கு விரும்பிய தரவையும் உள்ளிடவும்; தளம் சில நொடிகளில் ஒப்பீட்டு முடிவுகளை வழங்குகிறது. சேவையாளர்களை மாற்ற விரும்பாதவர்களுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்துகிறவற்றோடு சிறந்த சலுகைகளை அறிந்துகொள்ளமுடியும் .

Placet சலுகைகள் முதல் தடையற்றச் சந்தையின் சலுகைகள் வரை

Ilportaledelleofferte.it பயனர்களுக்கு Placet சலுகைகள் (பாதுகாப்பின் சம நிபந்தனைகளில் தடையற்ற விலை), நிலையான அல்லது மாறுபட்ட விலையில் தடையற்றச் சந்தை சலுகைகளின் (mercato libero a prezzo fisso/variabile) ஒப்பீட்டினை வழங்குகிறது . ” இத் தளம், மேலும் பயனுள்ளதாக இருக்கும், ஏனென்றால் தகவல் அழைப்பு மையம் உங்களை தொடர்பு கொள்ளும் போது நீங்கள் உடனடியாக வழங்கப்பட்ட சலுகையை இத் தளத்தின் மூலம் கண்டுபிடித்து அதன் விலை மற்றும் ஒப்பந்த நிபந்தனைகளை சரிபார்த்து, அவர்கள் எதை விற்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இறுதியாக, பாதுகாக்கப்பட்ட சந்தையுடன் (mercato tutelato) தடையற்ற சந்தையையும் (mercato libero) ஒப்பிட்டுப் பார்க்க இந்த தளம் உதவுகிறது ” என்று Arera விளக்குகிறது .

உங்கள் கவனத்திற்கு