முக்கிய அறிவித்தல்: அவசர வருமானத்திற்கு (Reddito di emergenza) நேற்று முதல் விண்ணப்பிக்கலாம்

அவசர வருமானத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறை INPS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் Nunzia Catalfo அதை அறிவித்துள்ளார்.

இன்று காலை முதல் சுமார் 20,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கு ஜூன் 30 க்குள் விண்ணப்பிக்க முடியும். “2 மில்லியன் குடிமக்களுக்கு கொரோனாவைரசு மேலதிக சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது, இப்போது மாதத்திற்கு 400 முதல் 800 யூரோக்கள் வரை பெறக்கூடியவர்களுக்கு இது உறுதியான உதவி” என்று அவர் விளக்கினார்.

மறுதொடக்க ஆணையில் முன்னறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, பிற மானியங்களுக்கு உரிமை இல்லாத மற்றும் பணிநீக்க நிதிகள் கூட இல்லாத குடும்பங்களுக்கு வழங்கப்படும் ஒரு உதவியாகும். இவ் உதவியானது தனிநபருக்கு 400 யூரோக்களும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 800 யூரோக்களும் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். இதற்கு caf மற்றும் patronatoவின் உதவியுடனும் விண்ணப்பிக்கலாம்.

உங்கள் கவனத்திற்கு