Lombardia, “Pacchetto famiglia” எனும் மேலதிக உதவி

Lombardia பிராந்தியத்தில் கொரோனாவைரசு அவசரகாலத்தால் பொருளாதார நெருக்கடிகளை மேற்கொள்ளும் குடும்பங்களை ஆதரிப்பதற்கான Pacchetto famiglia எனும் இன்னொரு அசாதாரண நிவாரண உதவி வழங்கப்படுகின்றது.

இது முக்கியமாக சிறு வயது பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
முதல் வீட்டுக் கடன்களின் தவணையை செலுத்துவதற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு தடவை 500 யூரோக்களும், இணையவழி கல்விக்காக கற்பித்தல் உபகரணங்களை வாங்குவதற்காக (கணினி, tablet) ஒரு வீட்டிற்கு ஒரு தடவை 500 யூரோக்கள் வரை ஏற்படும் செலவுகளில் 80%க்கு சமமான உதவியும் வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க தேவையான அம்சங்கள்:

  • Lombardia பிராந்தியத்தில் வசிப்பவர்கள்;
  • ஒப்பந்த வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிக பிரதிநிதித்துவம் அல்லது நிறுவன ஊழியர்கள்: ஜனவரி 2020ல் பெறப்பட்ட மொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது, ​​விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரத்தில் பெறப்பட்ட கடைசி ஊதியம் குறைந்தது 20% குறைந்திருந்தால்;
  • சுயதொழிலாளர்கள்: கொரோனாவைரசு அவசரநிலையால் வணிகத்தை மூடுவது அல்லது கட்டுப்படுத்தியதன் விளைவாக பிப்ரவரி 21, 2020 க்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட காலாண்டுடன் ஒப்பிடும்போது சராசரி தினசரி வருவாய் குறைப்பு அல்லது விண்ணப்ப திகதி மற்றும் மேற்கூறிய திகதிக்கு இடையேயான குறுகிய காலத்தில் 2019 காலாண்டுடன் ஒப்பிடும்போது தினசரி வருவாயில் 33%க்கும் அதிகமான குறைப்பு ஏற்பட்டிருந்தால்;
  • கொரோனாவைரசால் குடும்பத்தில் ஒரு உறுப்பினரின் மரணம்;
  • முதல் வீட்டுக் கடனுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் 16 வயதுக்குக் குறைவான அல்லது சமமான ஒரு பிள்ளையாவது இருத்தல்;
  • இணையவழி கல்விக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையாவது இருத்தல்;
  • 30.000 யூரோக்களுக்கு குறைவான அல்லது சமமான ISEE 2020 (இல்லாத பட்சத்தில் ISEE 2019). இரண்டும் இல்லாத பட்சத்தில் கூட விண்ணப்பிக்க முடியும் ஆனால் விண்ணப்பதாரர் ISEE 2020 சமர்ப்பிக்கும் வரை செயல்முறை இடைநிறுத்தப்படும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட தருணத்திலிருந்து 90 நாட்களுக்குள் இதை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது விண்ணப்பம் அனுமதிக்கப்படாது.

மேலும், குழந்தைகளின் எண்ணிக்கை, Lombardia பிராந்தியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் அல்லது அதற்கு சமமான காலத்திற்கு வசித்தல், குடும்பத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்களின் இருப்பு, குடும்பத்தில் தன்னிறைவு இல்லாதவர்கள் இருப்பது போன்ற காரணிகளுக்கு கூடுதல் கட்டணமும் வழங்கப்படும்.

மே 4, 2020 12 மணியிலிருந்து மே 11,2020 12 மணி வரை இதற்கான விண்ணப்பம் https://www.bandi.servizirl.it/procedimenti/welcome/bandi இணையத்தளமூடாக மட்டும் அனுப்ப முடியும். விண்ணப்பம் அனுப்பும் போது, முதல் வீட்டுக் கடனுக்கான விண்ணப்பம் என்றால் கட்டப்பட்ட ஒரு தவணையின் ஆதாரமும், இணையவழி கல்விக்கான விண்ணப்பம் என்றால் வாங்கியப் பொருட்களுக்கான ஆதாரமும் சேர்க்கப்பட வேண்டும். முதலில் இவ் இணையத்தளத்தில் பின்வரும் முறைகளில் பதிவு செய்ய வேண்டும்:

  1. சுகாதார அட்டையின் (tessera sanitaria) pin மூலம்;
  2. SPID குறியீடு மூலம் அல்லது
  3. பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் (nome utente e password) மூலம்.

உங்கள் கவனத்திற்கு