மே 4 முதல் பிராந்தியங்களின் தனிப்பட்ட விதிமுறைகள் (புதிய இணைப்பு)

தமிழ் மக்கள் கூடிய அளவில் வாழும் பிராந்தியங்களில் கட்டம் இரண்டிற்கு விதிக்கப்பட்ட தனிப்பட்ட விதிமுறைகளை கீழ் காணலாம்.

Piemonte பிராந்தியத்தின் விதிமுறைகள்

  • உடல்நிலை: 37.5 பாகைக்கு அதிகமாக உடல்வெப்பநிலை கொண்டவர்கள் அல்லது COVID-19 க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கவேண்டும். மேலும் தங்களது குடும்ப வைத்தியருடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
  • முகக்கவசம்: சமூக இடைவெளியை பேண இயலாத இடங்களிலும், வெளியிடத்தில், பொது போக்குவத்திலும் முகக்கவசம் “கட்டாயமாக” அணிய வேண்டும். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், முகக்கவசங்கள் அணியமுடியாத முக்கிய காரணங்கள் உள்ளவர்களும் இதிலிருந்து விலக்கப்படுகிறார்கள்.
  • உணவகங்கள்: பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்து, எடுத்து செல்லக்கூடிய மற்றும் வீட்டுக்கு கொண்டு வந்து தரக்கூடிய உணவுச் சேவை கொண்ட உணவகங்கள் திறக்க அனுமதிக்கப் படுகிறது.
  • கடைகள்: வீட்டிலிருந்து தனி ஒருவர் மாத்திரமே கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முடியும். ஒருவருக்கு இயலாத பட்சத்தில் மட்டுமே இன்னொருவருடன் செல்ல முடியும்.
  • வேறு வீடுகள்: வசிக்கும் பிராந்தியத்திற்குள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய பட்சத்தில், விடுமுறைக்கான இரண்டாவது வீடுகளுக்குச் செல்ல அனுமதி உண்டு

Emilia Romagna பிராந்தியத்தின் விதிமுறைகள்

  • வேறு வீடுகள்: மே 4 திங்கள் முதல் சொந்தமான வேறு வீடுகளை அடைய அனுமதிக்கப்படும். நீங்கள் வசிக்கும் மாகாணத்தில் உங்களுக்கு சொந்தமான வேறு வீடு அமைந்திருந்தால் மட்டுமே நீங்கள் தனித்தனியாக அங்கு செல்ல முடியும். மேலும், பராமரிப்புக்காக மட்டுமே செல்லமுடியும். நீங்கள் அங்கு தங்க முடியாது.
  • முகக்கவசம்: வெளியிடங்களில் மற்றும் சமூக இடைவெளியை பேண முடியாத இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியமாகும்.
  • உறவினர்கள்: ஒரே பிராந்தியத்தில் வசிக்கும் நெருங்கிய சொந்தங்களை சந்தித்தல் அனுமதிக்கப்படும்.
  • நடைபயிற்சி: மிதிவண்டி ஓட்டுதல், நடையோட்டம், பிள்ளைகளுடன் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியவை அனுமதிக்கப்படும்.
  • மயானங்கள்: திங்கட்கிழமை முதல் அவை மீண்டும் திறக்கப்படும். நேரம் ஒவ்வொரு நகராட்சிகளால் வரையறுக்கப்படும். இறுதி சடங்கைப் பொறுத்தவரை, முதல் மற்றும் இரண்டாம் நிலை உறவினர்கள் அதிகபட்சம் 15 பேர் வரை பங்கேற்கலாம்.
  • நூலகங்கள்: சமூக இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்க புத்தகங்களைப் பெருவதற்காக மட்டுமே அவை திறக்க முடியும்.
  • பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்: பசுமை பகுதிகள் மீண்டும் திறக்கப்படலாம். கூட்டம் கூடுவதை தவிர்க்க இயலாத அல்லது ஒரு மீட்டரின் பாதுகாப்பு இடைவெளிகளுக்கு இணங்க உத்தரவாதம் அளிக்க முடியாத பகுதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு நகராட்சி ஆளுநர்கள் உத்தரவிட முடியும்.
  • பொது போக்குவரத்து: ஓட்டுநர்களால் பயணச்சீட்டுகளின் விற்பனை பேருந்துகளில் நிறுத்தப்படும்.
  • சிகையலங்கார நிலையங்கள்: ஜூன் 1 முதல் சிகையலங்கர நிலையங்கள் திறக்கப்படலாம். பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் முகக் கவசம் அணிவது அவசியம். நிலையங்களின் திறப்பு நேரம் மற்றும் சேவையின் நேரம் குறைக்கப்பட வேண்டும்.

Lombardia பிராந்தியத்தின் விதிமுறைகள்

  • முகக்கவசம்: வெளியில் செல்லும்போது முகக்கவசம் அல்லது துணிகள் கொண்டு சுவாச வழிகளை “கட்டாயமாக” மூடிக்கொள்ளவேண்டும். 6 வயத்துக்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை.
  • கடைகள்: திறந்த வெளி மளிகை பொருட்களின் சந்தைகள், புத்தகக் கடைகள், பூக்கடைகள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், கணினிகள், தொலைபேசி மற்றும் வீட்டு உபகரணங்கள் பழுதுபார்ப்பு மற்றும் விற்பனைக்கான கடைகளும் திறக்க அனுமதியுண்டு.
  • நடைபயிற்சி: வெளியில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய முடியும், ஆனால் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு, முகக்கவசம் (அல்லது வாய் மற்றும் மூக்கை துணியினால் மறைத்து) அணிய வேண்டிய கட்டாயம் உண்டு. வெளியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மற்றவர்களுக்கூடான தொடர்புகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
  • வேறு வீடுகள்: மே 4 திங்கள் முதல் சொந்தமான வேறு வீடுகளை அடைய அனுமதிக்கப்படும்.
  • போக்குவரத்து: கையுறைகள் மற்றும் முகக்கவசங்களின் பயன்பாடு பொது போக்குவரத்தில் கட்டாயமாகும். தரிப்பிடங்களில் நிற்கும்போது, ஊந்துகளில் உள்ளும் கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை சரியாக அணிவது பயணிகளின் பொறுப்பாகும். ஊந்துகளில் பயன்படுத்தப்படுத்த கூடாத இருக்கைகள் தெளிவாக அடையாளங்களுடன் குறிக்கப்பட்டுள்ளன. ஊந்துகள் மற்றும் நிலையங்களின் துப்புரவு, சுத்திகரிப்பு மற்றும் கிருமி நீக்கம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மேற்கொள்ளப்படுகின்றன.
  • Metropolitana மற்றும் தொடரூந்து நிலையங்களின் மின்தூக்கி (ascensore) முதன்மையாக மாற்றுத்திறனாளிக்கு மட்டுமே.
  • மிதிவண்டி, மடிப்பு மிதிவண்டி (bicicletta pieghevole), சிறிய மின்சார போக்குவரத்து சாதனங்கள் எப்போதும் அனுமதிக்கப்படுகிறது.

Liguria பிராந்தியத்தின் விதிமுறைகள்

  • உடற்பயிற்சி: சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு காலை 6 மணி முதல் 22 மணி வரை திறந்த வெளியில் நடப்பதற்கு, உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது ;
  • வேறு வீடுகள்: தேவையான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒரே மாநிலத்தில் உள்ள சொந்தமான வேறு வீடுகளுக்கு செல்லமுடியும், ஆனால் ஒரு நாளுக்குள் மீண்டும் திரும்ப வேண்டும்.
  • உணவகங்கள்: எடுத்து செல்லக்கூடிய மற்றும் வீட்டுக்கு கொண்டு வந்து தரக்கூடிய உணவுச் சேவை கொண்ட உணவகங்கள் திறக்க அனுமதிக்கப் படுகிறது.
  • வசிக்கும் நகரத்தை விட்டு மாநில அளவில் கடைகளுக்கு செல்லமுடியும்
  • சிற்றுந்துகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேட்பட்ட நபர்கள் செல்லலாம்.
  • மயானங்கள், பூங்காக்கள்: ஒவ்வொரு நகராட்சி தலைவர்களும் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு மயானங்கள், பூங்காக்கள் திறப்பது பற்றி முடிவுகள் எடுப்பார்கள்.
  • Liguria பிராந்தியத்துற்குள் உறவினர்களைச் சந்திக்க செல்லமுடியும்.

Puglia பிராந்தியத்தின் விதிமுறைகள்

  • உணவகங்கள்: பாதுகாப்பு தூரத்தைக் கடைப்பிடித்து, எடுத்து செல்லக்கூடிய மற்றும் வீட்டுக்கு கொண்டு வந்து தரக்கூடிய உணவுச் சேவை கொண்ட உணவகங்கள் திறக்க அனுமதிக்கப் படுகிறது. மேலும் உணவகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நுகர்வுக்கான தடை விதிக்கப்படுகிறது.
  • செல்லப்பிராணிகள்: செல்லப்பிராணிகளுக்கான சீர்ப்படுத்தும் சேவையை மேற்கொள்ளும் கடைகள் திறந்திருக்கும், அவை நியமனம் மூலம் பயன்படுத்தப்படலாம்.
  • மயானங்கள்: கூட்டங்களைத் தவிர்த்து, போதுமான இடைவெளிகள் இருக்கும் பட்சத்தில் மயானங்கள் மீண்டும் திறக்கப்படும்.
  • வேறு வீடுகள்: வசிக்கும் பிராந்தியத்திற்குள், பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய பட்சத்தில், விடுமுறைக்கான இரண்டாவது வீடுகளுக்குச் செல்ல அனுமதி உண்டு. வேறு பிராந்தியாங்களிலிருந்து Pugliaவுக்குத் திரும்புபவர்கள் 14 நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும்.

Sicilia பிராந்தியத்தின் விதிமுறைகள்

  • வேறு வீடுகள்: மே 4 முதல் Siciliaவின் பிற நகராட்சிகளிலும் இரண்டாவது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும், ஆனால் இரண்டு நிபந்தனைகளை உள்ளன: அவை, அவ்வப்போது இல்லாமல், “பருவகால” இடமாற்றத்திற்கும் கோடைகாலத்திற்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயன்படுத்த முடியாது.
  • மயானங்கள்: நகர ஆளுநர் திறப்புக்கு உத்தரவிட்டால் மயானங்களுக்குச் செல்லலாம்.
  • விளையாட்டு: தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். சிறுவர்கள் மற்றும் முற்றிலும் தன்னிறைவு இல்லாதவர்களுடன் இன்னொரு நபர் செல்லலாம். மேலும், குறிப்பாக ஓட்டம், tennis, golf, மிதிவண்டி ஓட்டுதல், படகோட்டம் மற்றும் குதிரை சவாரி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
  • கடைகள்: பாதுகாப்பு தூரத்தைக் கடைப்பிடித்து, எடுத்து செல்லக்கூடிய மற்றும் வீட்டுக்கு கொண்டு வந்து தரக்கூடிய உணவுச் சேவை கொண்ட உணவகங்கள் திறக்க அனுமதிக்கப் படுகிறது. உணவகங்களின் வளாகத்திலும் அருகிலும் உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதற்கான தடை உள்ளது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் மளிகைக் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
  • செல்லப்பிராணிகள்: வீட்டின் அருகிலேயே இருந்தாலும், அவர்களின் உடலியல் தேவைகளுக்காக நகர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் திங்கட்கிழமை முதல் விலங்கு சீர்ப்படுத்தும் நடவடிக்கையும் அனுமதிக்கப்படும், இந்த சேவை நியமனம் மூலமாகவும், மக்களிடையே நேரடி தொடர்பு இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்து: நகர்ப்புற பொதுப் போக்குவரத்து வாகனங்களில், பயணிகள் அதிகபட்சமாக 40% இடங்களை அணுக அனுமதிக்கப்படுகிறார்கள், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வாகனத்தின் ஓட்டுநருக்கு ஒதுக்கப்பட்ட இடம் சரியான முறையில் எல்லைப்படுத்தப்பட வேண்டும்.
  • போக்குவரத்து: வேறு பிராந்தியாங்களிலிருந்து Siciliaவுக்கு வருபவர்கள் இணையத்தில் தங்களைப் பதிவு செய்து, 14 நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும். ??இணையத்தில் பதிவு செய்து கொள்ள

உங்கள் கவனத்திற்கு