வைரசுத் தடுப்பூசி பரிசோதனை வெற்றியடைந்தால் செப்டம்பரில் தயாராகும்

Jenner Institute சோதனைத் தடுப்பூசியை முதலில் பரிசோதிக்கும் ஆஸ்திரேலிய மற்றும் இத்தாலி ஆராச்சியாளர்கள்

கொரோனாவைரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சோதனை தடுப்பூசியை முதலில் இத்தாலிய ஆராய்ச்சியாளர் Elisa Granato மற்றும் ஆஸ்திரேலியர் Edward O’Neill போட்டுள்ளார்கள்.
Oxford பல்கலைக்கழகத்தின் Jenner Institute குழுவினரால் உருவாக்கப்பட்ட Chadox1 nCoV-19 என்னும் சோதனைத் தடுப்பூசியை இவர்கள் உடம்பில் செலுத்தி மருந்தின் விளைவுகளை கண்காணித்து வருகின்றனர்.

“நான் ஒரு விஞ்ஞானி, ஒரு விஞ்ஞான திட்டத்திற்கு எனது ஆதரவை வழங்க விரும்பினேன். தனிப்பட்ட முறையில், இந்த தடுப்பூசி மீது எனக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நம்பிக்கை உள்ளது” என்று Elisa Granato BBC யிடம் கூறினார். மேலும், “நான் இதுவரை உடல்நல ரீதியில் நலமாக இருக்கிறேன், முழு அணியும் ஒரு சிறந்த கண்காணிப்புப் பணியைச் செய்து, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஆதரவளிக்கிறது.” என்றும் தனது twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Edward O’Neill அதே பல்கலைக்கழகத்திற்குள் புற்றுநோயியல் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். «நான் ஒரு ஆஸ்திரேலியர். இத்தாலியில் போல எங்கள் நாட்டில் வைரசு ஆபத்தானதாக இல்லாததால் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். இதனால் தான் சோதனைக்கு முன்வந்தேன். மற்றவர்களுக்கு நான் உதவ வேண்டிய கடமையில் இருக்கிறேன். மேலும், தடுப்பூசியின் சாத்தியமான பக்க விளைவுகளை விட கொரோனோவைரசைப் பற்றி நான் அதிகம் பயப்படுகிறேன். இது ஒரு பயங்கரமான நோய். ஆராய்ச்சி குழுவுக்கு உதவ எதுவாக இருந்தாலும் அதை நான் செய்வேன் » என்று அக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.

இந்த பரிசோதனையில் 18 முதல் 55 வரையிலான 500 நபர்கள் பங்கெடுத்துள்ளார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் விளைவுகளால் ஏற்படக்கூடிய அறிகுறிகளை கண்காணிக்க online மூலம் ஒரு நாட்குறிப்பில் அவற்றை குறித்து வருகிறார்கள். மேலும், தடுப்பூசிக்கான நோய் எதிர்ப்பு சக்தியை மதிப்பிடுவதற்கு அவர்கள் தொடர்ச்சியான மருத்துவ கண்காணிப்புக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், குரங்குகளில் சோதிக்கப்பட்டுள்ள இத் தடுப்பூசியின் செயல்திறனும் பாதுகாப்பும் ஒரு மாதத்திற்குள் உறுதிசெய்யப்பட்டால், செப்டம்பர் மாத தொடக்கத்தில் மில்லியன் கணக்கான அளவு தடுப்பூசி தயாராக இருக்கும் என்று Oxford பல்கலைக்கழகத்தில் கொரோனாவைரசுக்கு எதிராக செயல்படும் சர்வதேச அணியின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கவனத்திற்கு