போக்குவரத்து நகர்வுகள் எவ்வாறு இருக்கும்?

தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட நெறிமுறைகளை எளிதாக்கி கட்டம் 2 இற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது இத்தாலி.
27 லட்ச தொழிலாளர்கள் வேலைகளுக்கு திரும்பக் கூடிய நிலை உருவாகியுள்ளது. இதில் ஒரு பெரிய பங்கு கொண்ட மக்கள் பணியிடங்களுக்கு செல்ல பொது போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி குறுகிய கால உள்ளூர் மற்றும் தேசிய, நீண்ட கால சர்வதேச போக்குவரத்து வழிமுறைகளில் சில விதிமுறைகளை அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ளது.

பயணச்சீட்டுகளுக்கான சில விலை வரம்புகள்

சில முக்கியமான நேர வேளைகளில் (காலையில் அல்லது 17-18 மணியளவில்) பொதுப் போக்குவரத்தில் கூட்டங்களைத் தவிர்ப்பதற்கு நாள் முழுவதும் வெவ்வேறு விலை வரம்புகளை அறிமுகப்படுத்துவது “கட்டம் 2” க்கான போக்குவரத்து அமைச்சின் பணிகளில் ஒன்றாகும்.

விமானங்கள்

இதுவரை ஐரோப்பாவில் விமான போக்குவரத்து முற்றிலும் குறைந்துள்ளது.

கட்டம் 2 இல்:
விமானத்தின் பயணக் காலம் முடியும் வரை கையுறைகள் மற்றும் முகக் கவசங்கள் அணியும் கட்டாயத்தை அறிமுகப்படுத்தல்;
விமானத்தில் பாதுகாப்பு இடைவெளிகளை கடைப்பிடிக்க நடுவரிசையில் உள்ள இருக்கைகள் வெறுமையாக வைத்திருத்தல்;
ஒவ்வொரு இருக்கைகள் நடுவிலும் Plexiglas ஆல் ஆன பாதுகாப்பு சுவர் அமைத்தல் போன்றவை ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

விமான நிலையங்களில் உடல்வெப்பநிலை அறிதல் கருவிகளின் பயன்பாடு மற்றும் பயணச்சீட்டு பரிசீலிக்கப் படும் கருமபீடம் (check-in) முதல் நுழைவு (Imbarco) வரை உயிரிய அளவியல் (biometrica) தொழில்நுட்ப கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

source: Corriere.it

தொடரூந்துகள்

Alta velocità மற்றும் Intercity போன்ற சேவைகளில் பாதுகாப்பு கருதி இருக்கைகள் முன்கூட்டி பதிவுகள் மேற்கொள்ளும்போது இருக்கைகளில் இடைவெளி பேணப்பட வேண்டும். ஏனைய உள்ளூர் தொடரூந்துகளில் பயணிகளின் நெரிசல்களை தவிர்க்க கூடியளவு வண்டிகளை இணைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பயணிகள் தற்பாதுகாப்பிற்கான முக கவசங்கள் அணிவது மற்றும் புகையிரத நிர்வாகிகளுடன் ஒத்துழைக்கவேண்டியது அவசியம் என தொடரூந்து போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

source: Corriere.it

Metropolitana

Metropolitana பொறுத்தவரை கூடுதலாக தொடரூந்துகளைப் போலவே இருக்கக்கூடும். நுழைவு, வெளியேற்றம் மற்றும் பயணச்சீட்டு பெரும் இடங்களில் மக்கள் கூட்டம் கூடுதலாக கண்காணிக்கப்படும்.

மேலும், நின்று கொண்டு பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இருக்கையில் இடைவெளி விட்டு அமரவேண்டும். தரையில் வரையப்பட்டுள்ள இடைவெளி சமிஞைகளை பின்பற்றவேண்டும். ஒவ்வொரு வண்டியும் கிருமிநாசினிகள் கொண்ட மருந்துகள் கொண்டிருக்கும்.

source: Corriere.it

பேருந்துகள்

பேருந்துகளின் போக்குவரத்து அதிகரிக்கப்படும். பேருந்துகளில் பாதுகாப்பு இடைவெளிகளை கடைப்பிடித்து இருக்கைகளின் அளவைப் பொறுத்தே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப் படுவார்கள். பேருந்துக்குள் ஒருவருக்குகொருவர் நேராக அல்லது அருகில் அமரமுடியாது. முக கவசம் அணிவது கட்டாயப் படுத்தப்படும். பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் 1 மீட்டர் இடைவெளி கொண்டு வரிசையில் நிற்கவேண்டும். மேலும்,பயணிகள் மத்திய நுழைவாயிலால் மட்டுமே உள்ளே செல்லமுடியும். முடிந்தளவு online மூலம் பயணச்சீட்டுகளை பெறுவது நல்லது. பேருந்துகளில் இவற்றைப் பெறுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக, பேருந்துகள் தினமும் சுத்தம் செய்யப்படல் வேண்டும்.

source: Corriere.it

உங்கள் கவனத்திற்கு