சுயதொழில் மற்றும் cassa integrazione க்கான பணம் வழங்க INPS ஆரம்பித்துள்ளது

கொரோனாவைரசு அவசர நிலை காரணமாக BONUS 600 என்ற சலுகையின் கீழ் சுய தொழில் செய்வோர்க்கான 600 யூரோக்கள் சலுகை 15 -17 ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நெருக்கடிகளுக்கு பின்பு ஏற்கனவே 1 மில்லியன் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்குரிய பணம் வழங்கப்பட்டு விட்டது எனவும் மீதம் இருப்பவர்களுக்கு இத்தாலிய வங்கிகளின் ஆதரவோடு 17 ஏப்ரல்-க்குள் INPS ஆல் வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மேலும், தற்போது INPS பல மாநிலங்களிலிருந்து சமர்ப்பிக்கப்படும் cassa integrazione in deroga விண்ணப்பங்களை உள்வாங்கிக் கொண்டு இருக்கிறது. இப்போது வரை 11 மாநிலங்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பிவைத்துள்ளனர். இருந்தாலும் INPS சாதாரண cassa integrazione யில் இருப்பவர்களுக்கே முதலில் பணம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்களால் கோரப்பட்ட 4,5 மில்லியன் cassa integrazione விண்ணப்பங்களில் அரைப் பகுதி ஏற்கனவே பணம் செலுத்தப்படுள்ள நிலைமையில் இருக்கின்றபோது, மீதம் ஏப்ரல் இறுதிக்குள் அல்லது விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கவனத்திற்கு