இத்தாலி வாழ் தமிழீழ மக்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் ஒன்றியம் காலத்தின் தேவையை உணர்ந்து அதன் துணை அமைப்புக்களின் உதவியுடன் எமது  சிறார்களின் தமிழ்க் கல்வியை இணையவழி ஊடாகவும் மேலும் எம் இளையோர்களின் பட்டறிவுடனும் அர்ப்பணிப்புடனும் தமிழர் தகவல் மையம் (tamilinfopoint.it) எனும் இணையத்தளம் ஊடாக இந்நோயின் தாக்கம் தொடர்பாகவும் அதனால் எம்மக்கள் எதிர் கொள்ளும் உளவியல் பொருளாதார தாக்கங்கள் குறித்து அவர்களுக்கான தகவல்களை அறியவும் மேலும் இத்தாலிய அரச, சுகாதார சட்டம் மற்றும் தொழிற்சங்கங்களின் அறிவுறுத்தல்களையும் மக்களின் பார்வைக்கு முன்வைத்து  மக்களோடு தொடர்பிலே  இருந்து  பணியாற்றிவருவதை அறிந்தேயுள்ளீர்கள்.

உலகின் உச்ச வளர்ச்சி பெற்ற நாடுகளையே ஆட்டம்காண வைத்திருக்கும் இந்நோயானது தற்போது எம் தாயகத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதை காணலாம் ஏற்கனவே பாரிய இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் எம்மக்களின் வாழ்நிலையை  சிங்கள இனவாத அரசு மேலும் ஒரு இனவழிப்பு வடிவமாக இந்நோயின் தாக்கத்தை எம் தாயக மக்கள் மீது திணித்துள்ளது.

தாழ்ந்த  பொருளாதார நிலையில் ஏற்கெனவே  போரின் வடுக்களை சுமந்த பல்லாயிரக் கணக்கான  எமது மக்கள் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் உணவுக்காகப் போராடும் பாரிய நெருக்கடியில் உள்ளனர் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே எமது மக்களுக்கு துன்பம் வரும்போது ஒவ்வொரு தருணமும் எமது புலம்பெயர் உறவுகளே தாங்குசக்தியாக இருந்துள்ளீர்கள்.

தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இத்தாலி தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களால் ஒரு தொகுதி பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தேவை காத்திருக்கின்றது.

எமது மக்களை  உடனடியாக  காக்க வேண்டிய  மாபெரும் கடமையும்  எமக்கானது.  இத்திட்டத்திற்காக  உங்களால்  முடிந்த அன்பளிப்பை தந்துதவுமாறு உரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.

நன்றி
இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
இத்தாலி தமிழர் ஒன்றியம்
தொடர்புகளுக்கு

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
Palermo : 3296159174, 3486018838, 3208704293, 3474848041

இத்தாலி தமிழர் ஒன்றியம் (மேற்பிராந்தியம்): 3292410980,
Napoli: 3334183976
Roma: 3396647742
Bologna: 3274911038
Reggio Emilia: 3293668920
Mantova – Biella: 3274524794
Genova: 3401156586 

உங்கள் கவனத்திற்கு