தமிழ் தகவல் மையம்: இளையோர்களின் மனமார்ந்த நன்றிகள்!

கொரோனாவைரசின் தாக்கத்தால் உலகமே அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் இவ் இக்கட்டான தருணத்தில் எமது தமிழ் மக்களுக்காக உதவ வேண்டும் என்ற ஒன்றுப்பட்ட சிந்தனையால் உருவாகியது தான் தமிழ் தகவல் மையம்!

அவசரகாலச் சட்டங்கள் மற்றும் இக் காலக்கட்டத்தில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பல குடும்பங்களிற்கு உதவும் முகமாக இத்தாலி அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைப் பற்றி எமது தகவல் தளமூடாக அறியத் தந்து இவற்றிற்கான மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு எமது தொலைபேசி இலக்கங்களையும் குறிப்பிட்டிருக்கின்றோம்.

இந்த நெருக்கடியில் எங்கள் மக்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைப் பற்றி Reggio Emilia, Val di Lana, Lecce என்று பல இத்தாலிய நகராட்சிகளுக்கு அறிவித்திருந்தோம். எங்கள் சேவைக்கு அங்கீகாரம் வழங்கி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கும் மேலாக எம் மக்கள் எங்கள் சேவைக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். இன்று வரை, எமது சேவையை அறிந்து எம்மைத் தொடர்பு கொண்டவர்கள் ஏராளமானவர்கள். தேவையான தகவல்களைப் பெற்று எமது பணி மென்மேலும் வளர வேண்டும் என உலக நாடுகளில் இருந்து கூட வாழ்த்திய உள்ளங்களும் பல.

இந்த தருணத்தில், எமது தகவல் தளத்தை அணுகி, எங்களைத் தொடர்பு கொண்ட அனைவருக்கும் எங்களின் பெரும் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எங்கள் பணி மென்மேலும் வளர உங்கள் நம்பிக்கை மிகுந்த வார்த்தைகளே எமக்கு பக்கபலமாக இருக்கின்றன. இதே வழியில், தமிழ் தகவல் மையம் பயணிக்கும்! கொரோனாவைரசு சம்மந்தமான தகவல்கள் மட்டுமல்லாமல் மேலும் பல்வேறுப்பட்ட செய்திகள், ஆக்கங்கள் மற்றும் தாயகம் சார்ந்த திட்டங்களை எங்கள் தளத்தில் காணத் தவறாதீர்கள்!

உங்கள் கவனத்திற்கு