Unicredit, Intesa Sanpaolo: கடன் தவணைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யலாம்!

COVID-19 அவசரநிலை காரணமாக நிச்சயமற்ற இந்த தருணத்தில், Unicredit மற்றும் Intesa Sanpaolo வங்கிகள் “இத்தாலி மறுவாழ்வு” (Cura Italia) ஆணையின் விதிகளை பூர்த்தி செய்ய இத்தாலி முழுவதும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக சில முயற்சிகள் மேற்க்கொண்டுள்ளன.

Unicredit வங்கி:

நீங்கள் பொருளாதார மற்றும் நிதி சிக்கல்களில் சிக்கியிருந்தால், 12 மாதங்கள் வரை, அசல் தொகைக்கு(quota capitale) மட்டுமே கடன் தவணைகளை நிறுத்தி வைக்குமாறு கோரலாம்.

அசல் தொகையின் கடன் தவணைகள் நிறுத்தி வைப்பது எப்படி?

  • அடமானக் கடன்களுக்கான அசல் தொகையை (sola quota capitale per i mutui ipotecari) மட்டுமே தவணைகளில் செலுத்துவதை இடைநிறுத்துமாறு உங்கள் வங்கியிடம் கோர முடியும்.
  • அசல் கடன் ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ட அதே முறையிலும் நிபந்தனைகளிலும் வட்டியை செலுத்த வேண்டும்.

இடைநிறுத்தப்பட்ட அசல் தொகையின் கட்டணத்தை மீண்டும் நீங்கள் இவ்வாறு மேற்க்கொள்ளலாம் :

  • எந்த நேரத்திலும்;
  • இடைநீக்க காலத்தின் முடிவில் (அதிகபட்சம் 12 மாதங்கள் வரை);
  • கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்தின் முடிவில்;

மேலும், இடைநிறுத்தப்பட்ட அசல் தொகை கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் அதற்கேற்ற வட்டி பெறுப்படும்.
(அசல் கடன் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட அதே விகிதத்திற்கு சமம்)

கோரிக்கையை எவ்வாறு செய்வது:

அடமானக் கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதை நிறுத்தி வைப்பததற்கு தேவையான தகுதிகள் மற்றும் அதை கோருவதற்கான வழிமுறைகளை வீட்டிலேயே இருந்தபடி, உங்கள் Unicredit ஆலோசகரை நேரடியாக தொடர்பு கொண்டு நீங்கள் சரிபார்க்க முடியும்.

மேலும் தகவலுக்கு மற்றும் இடைநீக்கம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, Unicredit வாடிக்கையாளர் சேவையை திங்கள் முதல் வெள்ளி வரை 8.00 முதல் 22.00 வரையிலும், சனிக்கிழமை 9.00 முதல் 14.00 வரையிலும் செயலில் உள்ள 800.32.32.85 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Banca Intesa Sanpaolo வங்கி:

தற்போதுள்ள கடன்களின் தவணைகளின் இடைநீக்கம் – அசல் பகுதிக்கு மட்டுமே அல்லது முழு தவணைக்குமான தற்காலிக இடைநிறுத்தம் 3 மாதங்களுக்கு கோரப்படலாம். மேலும், இனிவரும் அவசர காலத்தைப் பொறுத்து கூடுதல் 3 அல்லது 6 மாதங்கள் நீட்டிக்கப்படலாம்.

மேலதிக கடன் தவணைகளின் இடைநிறுத்தம் அல்லது ஏனைய தகவல்களுக்கு மின்னஞ்சல் அல்லது உங்கள் வங்கியை தொலைபேசி எண் 800.303.303 ஊடக தொடர்பு கொள்ளவும்.

வேறு வங்கிகளின் தகவல்களைப் பெற எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கவனத்திற்கு