“Cura Italia” ஆணை: 100 முதல் 600 யூரோக்கள் வரை சலுகைகள் வழங்கப்படும்.

"Cura Italia" ஆணை: 100 யூரோக்கள் மற்றும் 600 யூரோக்கள் சலுகைகள் வழங்கப்படும்.
இத்தாலிய பொருளாதார அமைச்சர் Roberto Gualtieri

கொரோனாவைரசின் அவசர நிலை காரணமாக மார்ச் மாதம் அரசினால் Cura Italia ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தொற்றுதலின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு பல ஊழியர்களை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டும், சுய தொழில் செய்பவர்கள் தங்கள் வேலைகளை நிறுத்தவும் நேரிட்டது. இவர்களுக்கான பொருளாதார உதவிகள் அரசாங்கத்தினால் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வகையில், மார்ச் மாதம் பணியிடத்தில் வேலை புரிந்தவர்களுக்கு 100 யூரோக்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு 600 யூரோக்கள் வரை சலுகை கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதாவது:

மார்ச் மாதம், பணியிடத்தில் வேலை செய்தவர்களுக்கு 100 யூரோக்கள் சன்மானம் வழங்கப்படும்.

ஆண்டுக்கு 40 ஆயிரம் யூரோக்களுக்குக் குறைவான வருமானம் கொண்ட மற்றும் வரிவிலக்கு இல்லாத அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இந்த சன்மானம் சென்றடையும். இது பணியிடத்த்தில் வேலை செய்த நாட்களுடன் ஒப்பிடப்படும். மேலும் ஏப்ரல் மாத சம்பள காசோலை ஊடாக அல்லது முடிந்தால் முதலாளியால் வழங்கப்படும்.

சுய தொழில் செய்வோர்க்கு ஏப்ரல் 2020லிருந்து 600 யூரோக்கள் வருமான ஆதரவு.

23 பெப்ரவரி 2020லிருந்து IVA வரி பதிவு (Partita iva) உள்ள சுயதொழிலாளர்களுக்கும், Co.Co.Co.(Contratto di collaborazione coordinata e continuativa) ஒப்பந்தங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் , 600 யூரோக்கள் பெருமதியானச் சலுகை பெற்றுக்கொள்ளலாம்.
இச் சலுகையானது, 2018 வரி ஆண்டில், 35.000 யூரோக்களுக்கு கீழ் வருமானம் பெற்றவர்களை குறிப்பிடுகிறது. மேலும், 35.000 முதல் 50.000 யூரோக்கள் வரை வருமானம் வைத்திருக்கும் பட்சத்தில், அவர் தனது சுயதொழிலை 2019 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் குறைந்த பட்சம் 33% வேலையை குறைத்திருந்தால் இந்தச் சலுகையைப் பெறலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 1 முதல் பணியாளர் நலன் நிறுவனத்தில் (INPS) தாக்கல் செய்யப்பட வேண்டும். கோரிக்கைகளின் காலவரிசைப்படி பணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மற்றும் இவையாவும் ஒரு வருமானமாக எடுத்துக் கொள்ளப்படாது, எனவே வரிகள் அற்றவை.

மேலும், பொருளாதார ஆதரவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் (Fondo per il reddito di ultima istanza) 100 மில்லியன் யூரோக்கள் எஞ்சியுள்ளது . இவை ஏப்ரல் மாதத்திற்கான நிதி ஆணையில் சேர்க்கப்படும்.

இந்த திட்டங்களிலிருந்து விலக்கப்பட்ட 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுத் தொழிலாளர்கள் (COLF), முதியோர் பராமரிப்பாளர்கள் (Badanti) போன்ற பிற தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் வெளிவரவுள்ள ஆணையில் பொருளாதார ஆதரவுச் சார்ந்த திட்டங்கள் வரும் என இத்தாலிய பொருளாதார அமைச்சர் Roberto Gualtieri உறுதியளித்துள்ளார்.

இவ் ஆணையை பற்றிய ஏனைய விபரங்களுக்கு.

உங்கள் கவனத்திற்கு