காலாவதியான குடியிருப்பு அனுமதிகள் (permessi di soggiorno) நீட்டிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவைரசு அவசர நிலை காரணமாக குடியுரிமை முதல் அனுமதிகள்(nulla osta), குடும்ப மீளிணைத்தல் (ricongiungimento familiare) வரை அனைத்து அதிகாரத்துவ நடைமுறைகளுக்கான காலக்கெடுவை தற்காலிகமாக உள்துறை அமைச்சகம் இடைநிறுத்தம் செய்துள்ளது.

17 மார்ச் 2020 வெளியாகிய Cura Italia எனும் ஆணையின் படி ஜனவரி 31 முதல் ஏப்ரல் 15 வரை காலாவதியாகும் வதிவிட அனுமதி, ஏனைய சான்றிதழ்கள் மற்றும் சலுகைகள் யாவும் ஜூன்15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலாவதியாகும் வதிவிட அனுமதியை (permesso di soggiorno) வைத்திருக்கும் குடியேற்றவாசிகள் அதை புதுப்பிப்பதற்க்கான விண்ணப்பத்தை ஜூன் 15 இலிருந்து மேற்கொள்ளலாம். அந்த திகதி வரை அவர்களின் ஆவணம் செல்லுபடியாகும் என்றும் அவ் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிவில் உரிமைகள் மற்றும் குடியேற்றத்திற்கான நடைமுறைகளுக்கான காலவரையின் இடைநீக்கம் இவற்றை உள்ளடக்குகிறது:

  • பருவகால வேலைகளுக்கான அனுமதியை வழங்குதல் (Rilascio nulla osta al lavoro stagionale);
  • குறிப்பிட்ட வேலைகளுக்கு அனுமதி வழங்குதல் (Rilascio del nulla osta al lavoro per casi particolari: ricerca, blue card, trasferimenti infrasocietari);
  • படிப்புக்கான வதிவிட அனுமதியை வேலைக்காகவும், பருவகால வேலைகளுக்கான வதிவிட அனுமதியை பருவகாலமற்ற பணிகளுக்காகவும் மாற்றுவது (Conversione dei permessi di soggiorno da studio a lavoro subordinato e da lavoro stagionale a lavoro subordinato non stagionale)
  • குடும்ப மீளிணைத்தலுக்கு அனுமதி வழங்குதல் (nulla osta per ricongiungimento familiare )
  • நீண்டகால குடியிருப்பாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பு அனுமதி வழங்குதல். (Permessi di soggiorno Ue per soggiornanti di lungo periodo)
  • திருமணம் மற்றும் குடியிருப்பு மூலம் குடியுரிமை (Cittadinanza per matrimonio e per residenza)

ஏனைய விபரங்களை சிவில் உரிமைகள் மற்றும் குடியேற்ற திணைக்களத்தின் வலைத்தளத்தில் காணலாம்.

உங்கள் கவனத்திற்கு