COVID-19 இல் இருந்து மீண்டு வந்த சீனா.

சீனாவில் Wuhan தலைநகரமாகக் கொண்ட Hubei மாகாணம் மூடப்பட்டதுடன் மனித வரலாற்றில் முதல் முறையாக அதிக நாட்களுக்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் (Quarantena). 23-24 ஜனவரி நள்ளிரவில் தொடருந்துகள், விமானங்கள்,நகர்ப்புற போக்குவரத்து மற்றும் தனியார் சிற்றுந்துகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டது, பின்னர் 6 கோடி (60 milioni) மக்களையும் வீட்டில் இருக்க வேண்டும் என சீன அரசாங்கம் உத்தரவிட்டது.
அனைத்து மருத்துவமனைகளில் நோயாளிகள் நிறைந்துவளிந்த நிலையில் துன்பமும் வேதனையும் அங்கு நடமாடிக்கொண்டிருந்தது.

COVID-19 இல் இருந்து மீண்டு வந்த சீனா.
“சுத்தப்படுத்தும் அணிகள்”

இரண்டு மாதங்களுக்குப் பிறகு வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட Hubei மாகாணம் சுகாதார நெறிமுறைகளை எளிதாக்குகிறது.
தலைநகர் Wuhan அதன் 11 கோடி மக்களுடன், ஏப்ரல் 8 வரை இதற்கு காத்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் Hubeiஇன் முன்னேற்றம் எங்களுக்கும் ஆறுதலளிக்கிறது: Hubeiஇல் வாழும் மக்கள் தொகை முழு இத்தாலியில் வாழும் சனத்தொகையின் எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளது; அதே போல் Wuhan நகரம் Lombardia மாநிலத்தில் வாழும் மக்கள் தொகைக்கு சரிக்குசமமாக இருக்கின்றது.

ஒரு வாரமாக Hubei மாநிலத்தில் தொற்று நோயால் புதிதாக பாதிக்கப்பட்ட நபர்கள் தோன்றவில்லை. அதாவது தொற்றுதல் கட்டுப்பாட்டு நிலைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் அதிகாரிகள் தொடருந்து நிலையங்கள் (stazioni ferroviarie) மற்றும் வீமான நிலையங்கள் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். ஆனால் “Green Code” நபர்கள் மட்டும் தான் மாநிலத்தை விட்டு நகர முடியும்.

சுகாதார அதிகாரிகள் ஒவ்வரு மக்களுக்கும் ஒரு வண்ணத்தில் “Code” கொடுப்பார்கள். வைரசு தொற்றுதலுக்கு பாதிக்கப்படாதவர்கள் மற்றும் இறுதி 2 வாரங்களில் தொற்றுநோயுள்ள மக்களுடன் தொடர்புகள் இல்லாதவர்களுக்கு தான் “Green Code” கொடுக்கப்படும்.
தொலைபேசி நகர்வுகளை கண்காணித்து மற்றும் வீட்டுக்கு வீடாய் சுகாதார பணியாளர்கள் நடத்திய சோதனைகள் அடிப்படையில் இந்த “Code” கொடுக்கப் படுகிறது.

சீனாவில் பல ஆண்டுகளாக தொடங்கப்பட்ட “சமூகக் கட்டுப்பாடு” திட்டங்கள், மிகவும் தீவிரமாக மற்றும் கண்காணிப்புடன் இயங்கி வருகின்றது.
அறுபது நாட்களாக மூடப்பட்டிருக்கும் பொது போக்குவரத்துகள் (mezzi pubblici) மீண்டும் திறப்பதற்கு தயாராகி வரும் நிலையில், சுத்தப்படுத்தும் அணிகள் (squadre di sanificatori) மூடி இருந்த பொதுப் போக்குவரத்து நிலையங்களையும் வாகனங்களையும் சுத்தப்படுத்தி வருகிறார்கள். கிருமிகள் அகற்றும் தெளிப்பான்களுடன் (spray disinfettante) சுத்தப்படுத்துகிறார்கள். சீனா வெற்றிகரமாக “COVID-19” வைரசை தோற்கடித்தது என்பதை, Beijing தலைநகரத்தில் உள்ள பத்திரிகைகள் பரப்புரை செய்கிறார்கள்.

Wuhan போக்குவரத்து நிலையங்களை “சுத்தப்படுத்தும் அணிகள்” சுத்தப்படுத்தி வருகிறார்கள்

Hubei மாநிலத்தில் பரவுதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சீனா அரசாங்கம் மீண்டும் தொழிற்சாலைகளை மற்றும் போக்குவரத்தை திறப்பதற்கு ஆர்வத்துடன் உள்ளது. பல கோடி தொழிலாளர்கள் தொழில் செய்யும் பகுதிகளிற்கு இன்னும் வர முடியாத நிலையில் இருக்கிறார்கள். வேலை இல்லாத காரணத்தால் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படலாம், என்று அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள்.

ஆனாலும் இதையெல்லாம் விட உள்நாட்டு நகர்வுகளாலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற மக்களாலும் மீண்டும் ஒரு பரவுதல் ஏற்படும் என்பது தான் அதிமுக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.
Beijing தலைநகரத்தை பரவுதல் இல்லாமல் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்பது தான் Xi Jinping பிரதமரின் முக்கிய நோக்கம். இன்று வெளி நாடுகளிலிருந்து தான் பரவுதல் சீனாக்குள் வருகிறது என்று கூறியுள்ளார். அமெரிக்கா (USA) சீனா மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கானப் பதிலாக இதைக் கூறியுள்ளார்.

திங்கட்கிழமை முதல் சர்வதேச விமானங்கள் (voli internazionali) Beijingல் தரை இறங்காது, வேறு 12 விமானநிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு மேற்க்கொள்ளப்படும் முதல் பரிசோதனையில், பிரச்சனைகள் எதுவும் இல்லாத பயணிகள் அதே விமானத்தில் Beijingவிற்கு பயணிக்கலாம்.
அங்கு மீண்டும் Beijing Capital விமானநிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு பின்பு, பயணிகள் ஓர் விடுதியில் (albergo) 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் (quarantena), அனைத்திற்குமான செலவுகளை பயணிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். பயணங்களுக்கு தடை விதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து Beijingற்கான பயணங்களை குறைப்பதற்கான நோக்கத்துடன் இவ்வாறான நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

உங்கள் கவனத்திற்கு