மீண்டும் ஒரு புதிய சுய அறிவிப்புப் படிவம் (Autocertificazione)!!

முக்கிய அறிவித்தல்:
வைரசின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்படட நகர்வுகளுக்கான விதிமுறைகளை 26-03-2020 உள்துறை அமைச்சு மீண்டும் மாற்றியமைத்துள்ளது. புதிய படிவத்தை பார்ப்பதற்கு

உள்துறை அமைச்சகத்தால் மீண்டும் ஒரு புதிய சுய அறிவிப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முதல் முக்கிய புள்ளியாக “கொரோனாவைரசின் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட அனைத்து விதிமுறைகள் பற்றி அறிந்திருப்பதாக” நபர் சுய அறிவிப்பு வழங்கவேண்டும்.

மேலதிகமாக, வேலை தேவைகள், அவசரமான மற்றும் அவசியமான சூழ்நிலைகள் தவிர, அனைத்து நகர்வுகளின் புறப்படும் மற்றும் சென்றடையும் இடத்தின் முகவரிகளையும் உள்ளிட வேண்டும்.

இறுதியாக வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சக உத்தரவு ஆணையின் படி என்ன செய்ய முடியும் மற்றும் என்ன தடைசெய்யப்பட்டுள்ளது என்ற புதிய விதிமுறைகளின் உள்ளடக்கம் கீழே:

 • சுய அறிவிப்புப் படிவம்
  அதை அச்சிட்டு நிரப்ப வேண்டும். இது கணினியிலிருந்து நேரடியாக நிரப்பப்பட்டு அச்சிடலாம். அச்சிடுவதற்கான வாய்ப்பு உங்களிடம் இல்லையென்றால், உங்கள் கைத்தொலைபேசியுடன் படம் எடுத்தும் வைத்துக்கொள்ளலாம். இந்த வசதிகள் இல்லாதவர்கள் அதை கையால் எழுதி வைத்துக்கொள்ளலாம்.
  புதிய படிவத்தை நிரப்புவது எப்படி என்று எடுத்துக்காட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 • படிவம்
  அதன் அனைத்து பகுதிகளும் நிரப்பப்பட வேண்டும். எப்போதுமே வழக்கமான நகர்வாக இருந்தால், நீங்கள் அதன் காலவரையை குறிக்கலாம் (தினசரி, மாற்று நாட்கள், வாராந்திரம்). மேலும், நகர்வுகள் வேறுபடுமாயின், அவற்றின் காரணம் மற்றும் திகதி குறிக்கப்பட வேண்டும். புதிய படிவத்தை நிரப்புவது எப்படி என்று எடுத்துக்காட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 • வைரசு தொற்றுக்கு உள்ளாகாதவர்கள்
  புதிய படிவத்தில், நீங்கள் வைரசுதொற்றுக்கு உள்ளாகவில்லை என்று குறிப்பிட வேண்டும்: இந்த விடயத்தில் இந்த படிவம் கொரோனாவைரசு தொற்றுப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களை குறிக்கிறது. பரிசோதனை மேற்க்கொள்ளாதவர்களுக்கு தவறான அறிக்கை என்ற பெயரில் வழக்கு பதியப்பட மாட்டாது ஆனால் அவர்களுக்கு 37.5 க்கு மேல் காய்ச்சல் இல்லை என்றும் வேறு அறிகுறிகள் இல்லை என்றும் அறிவிக்க வேண்டும்.
 • வார இறுதி நாட்களிலும் பல்பொருள் அங்காடிகள் திறந்திருக்கும் (புதிய இணைப்பு)
  வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவு விற்பனை கடைகள் சனிக்கிழமைகளில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும். கடைகள் அளவைப் பொறுத்து ஒரு நேரத்தில் ஒருவர் ஒருவராக உள்ளே செல்லும்படியாகவும், வெளியே வரிசையில் நிற்கும் போது பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடுக்குமாறு வலியுறுத்தபடுகிறார்கள். கையுறைகள் மற்றும் முகமுடி அணிவது அறிவுறுத்தப்படுகிறது.
 • தனியார் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் (புதிய இணைப்பு)
  அரசாங்க அலுவலகங்கள் திறந்திருக்கப்படும். தனியார் அலுவலகங்களைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் வேலையில் பணிகளை முன்னெடுக்க முடியாது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, எனவே இது ஊழியர்களுக்கான பணி நிமிர்த்தமான நகர்வை அனுமதிக்கிறது. சில அரசாங்க அலுவலகங்கள் பொது மக்களின் அணுகளை / நுழைவுகளை தவிர்க்கின்றன, உதாரணத்திற்கு l’Agenzia delle Entrate-Riscossione தனது அலுவலகங்களை மூடவும் மற்றும் அனைத்து பணிகளையும் இடைநிறுத்தம் செய்துள்ளது.
 • கலியாட்ட விடுதிகள் (bar) மற்றும் autogrill
  தொடருந்து நிலையங்கள் (stazioni ferroviarie), எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஏணைய இடங்களில் அமைந்துள்ள உணவுகள் மற்றும் குடிவகைகள் விற்பனை நிலையங்கள் மூடப்படவேண்டும். நெடுஞ்சாலைகளில் (autostrade) அமைந்துள்ள விற்பனை நிலையங்கள் (autogrill) வெளியே கொண்டு சென்று உட்கொள்ளக்கூடிய முறைகளை மேற்க்கொள்ளும் பட்சத்தில் அவை திறந்திருக்க அனுமதி உண்டு எனவும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 • சாலைத் தடைகள் (புதிய இணைப்பு)
  உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, சோதனைச் சாவடிகள் (posti di blocco) மற்றும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினர் சுய அறிவிப்புப் படிவங்களை விசாரிக்கும் கடமைகளில் ஈடுபடுவார்கள். குடிமக்கள்கள் நிரப்பிய படிவத்தை அல்லது நிறுத்தப்படும் இடத்தில் வழங்கப்படும் படிவத்தை நிரப்பி ஒப்படைக்க வேண்டும். பின்னர் அதன் உண்மைத் தண்மையினை கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரியால் விசாரிக்கப்படும்.
 • Pasqua நாட்களில் மற்றும் வேறு வீடுகளுக்குச் செல்வது (புதிய இணைப்பு)
  இந்த உத்தரவு, மக்கள் குறிப்பாக வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் (Pasqua நாட்களில்) நகராமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் மக்கள் வெளியே நகருவது, தங்கள் பிரதான வதிவிடத்தை தவிர வேறு வீடுகளுக்கு செல்வதை தடை செய்கிறது. எனவே வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை நகர்வுகள் எதுவும் மேற்றக்கொள்ளகூடாது. மற்ற நாட்களில் அவசிய வேலை அல்லது குடும்ப காரணங்களுக்காக மட்டுமே மேற்றக்கொள்ளலாம்.

  உங்களின் வேறு வீடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு அவசியமான காரணங்கள் இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். இக் காரணம் ஏனைய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் பிற சிக்கல்களைக் குறிக்கிறது (எடுத்துக்காட்டாக: எரிவாயு அல்லது நீர் கசிவுகள்).
 • முகமூடிகளைப் பயன்படுத்துவது நல்லது.
  நீங்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக கடைகளுக்கு மற்றும் மருந்தகத்திற்குச் செல்லலாம். முகமூடியைப் பயன்படுத்துவது நல்லது. குறிப்பிட்ட “பாதுகாப்பு இடைவெளியை” கடைப்பிடிப்பது கட்டாயமாகும். “நிரூபிக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட முடியாத தேவைகள்” இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பகுதியில் தான் நடமாட வேண்டும், அதிகபட்சம் இரண்டு நபர்கள் மட்டுமே வெளியே செல்லலாம்.
 • சிற்றுந்து (macchina)
  வாகனத்தில் அதிகபட்சமாக இரண்டு நபர்கள் மட்டுமே செல்லலாம். ஒருவர் முன் இருக்கையிலும் மற்றவர் பின் இருக்கையில் இருப்பது நல்லது. இவ்வாறாயின் பாதுகாப்பு இடைவெளியை கையாளலாம்.
 • மோட்டார்வண்டி (motocicli), துவிச்சக்கர (bicicletta) வண்டி
  மோட்டார்வண்டியில் அல்லது துவிச்சக்கர வண்டியில் செல்பவர்கள் வெளியே செல்லும் சரியான காரணத்தை நிரூபிக்க வேண்டும்.
 • பூங்காக்கள்: நடைபயிற்சி , அதன் நேரம் மற்றும் தூரத்திற்கான வரம்புகள்
  அரசாங்கம் பிறப்பித்த உத்தரவின் படி பூங்காக்கள், விளையாட்டுப் பகுதிகள் மற்றும் பொதுப் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்வதைத் தடைசெய்யப்பட்டுள்ளது.

  மக்கள் நடைபயிற்சி செய்வதற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டிற்கு வெளியே அதிக நேரம் செலவிடுவதைத் தடுப்பதற்காவும் இந்த உத்தரவு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
 • நாயுடன் நடைப்பயிற்சி (portare il cane a passeggio) (புதிய இணைப்பு)
  இதேபோல், நாயுடன் நடந்து செல்வதும் வீட்டிற்க்கு அருகாமையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

  வேலிகள் அற்ற பசுமையான பகுதிகளில் மக்கள் நுழைவதைத் தடுக்க காவல்துறையினரால் அல்லது இராணுவத்தினரால் கண்காணிக்கப்படும்.
 • நடையோட்டம் (jogging) உள்ளிட்ட வெளிப்புற விளையாட்டுகளுக்கான புதிய வரையறை (புதிய இணைப்பு).
  ஆணையின் படி, வெளிப்புற பொழுதுபோக்குச் செயல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. தங்கள் வீட்டிற்கு அருகில் தனியாக அல்லது மற்றவர்களிடம் இருந்து 1 மீட்டர் இடைவெளியை கடைபிடித்து உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
  எனவே சைக்கிள் பாதைகளில் செல்லவோ அல்லது நகரங்களைச் சுற்றியுள்ள இடங்களில் ஓடவோ முடியாது.
 • வேலைத்தளத்தை விட்டு வெளியே செல்லுதல்
  வேலைக்குச் செல்வோர் “நிரூபிக்கப்பட்ட காரணங்களுக்காக” மட்டுமே பணியிடத்தை விட்டு வெளியேற முடியும் என்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்நியர்களுடன் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறையினரின் கையேடு தெளிவுபடுத்துகிறது. உங்கள் தொழில் தொடர்பான காரணங்களுக்காக வெளியேறும் பட்சத்தில் நீங்கள் உங்கள் பாதுகாப்பு இடைவேளியை கவனத்தில் வைத்திருக்க வேண்டும், மற்றும் முகமூடி அணிவது உகந்தது.
 • வயதானவர்கள்
  நீங்கள் வயதானவர்களுக்கு மருந்துகள் அல்லது மளிகைப் பொருட்களைக் கொண்டு செல்லலாம். கையுறைகள் மற்றும் முகமூடி அணிய வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
 • தனிமைப்படுத்தல்(Quarantena)
  கொரோனாத்தொற்றுக்கு அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அல்லது தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கும் வெளியே செல்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
 • உடல்நல காரணங்கள்
  மருத்துவரிடம் செல்ல வேண்டியவர்கள் அதற்காக செல்லலாம், ஆனால் செல்வதற்க்கான காரணத்தை நிரூபிக்க வேண்டும். அதேபோல, மருத்துவ நிபுணர்களிடம் (visite specialistiche) மற்றும் மருத்துவ பகுப்பாய்வுகளுக்கு (analisi cliniche) உட்படுத்த வேண்டிய தேவைகளுக்காக செல்பவர்களுக்கும் அதே நடைமுறை செல்லுபடியாகும். படிவத்தில், காரணத்தை தவிர, மருத்துவரின் பெயர் மற்றும் செல்லும் இடம் குறிப்பிடப்பட வேண்டும்.
 • கூட்டங்கள்
  அவை தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே நீங்கள் கடைக்களுக்கு, மருந்தகத்திற்கு அல்லது பிற கொள்முதல்கள் செய்யச் செல்லும்போது கூட, நீங்கள் உங்கள் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்.
 • வசிக்கும் நகரத்தை விட்டு வெளியேறுதல்
  அவசியமான தொழில் மற்றும் குடும்ப காரணங்களை தவிர வேறு ஒரு தேவைக்காகவும் ஒரு நகரத்தை விட்டு வேறொரு நகரத்திற்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
 • வீட்டிற்குத் திரும்புதல்
  ஆணை அமுல்படுத்தப்பட்ட நேரத்தில் வேறு வீடுகளில் அல்லது வெளிநாட்டில் இருந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்பலாம், ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
 • தண்டனை (புதிய இணைப்பு)
  குறிப்பிடப்பட்ட காரணமின்றி வெளியேறுபவர்கள் மூன்று மாதங்கள் வரை கைது செய்யப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் 650 வது பிரிவில் வழங்கப்பட்டுள்ளபடி 3000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். தனிமைப்படுத்தலை மீறுபவர்கள் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பொது சுகாதாரத்திற்கு எதிரான தீங்கிழைக்கும் குற்றங்களுக்கான வழக்கும் பதியப்படும்.

உங்கள் கவனத்திற்கு