இத்தாலி தபால் நிலையங்களின் ஓய்வூதியங்களை (Pensioni) சார்ந்து புதிய நடவடிக்கைகள்

கொரோனா வைரசு அவசரநிலையை எதிர்கொள்வதற்கும் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இத்தாலி தபால் நிலையங்கள் (Poste italiane) புதிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக,
சேமிப்புப் புத்தகம், Bancoposta, Postepay வைத்திருப்பவர்கள் ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதியங்களை (Pensioni) மார்ச் 26 அன்று பெற்றுக்கொள்ளலாம். எனவே தபால் நிலையங்களுக்கு உள்ளே செல்லாமலேயே, வெளியே இருக்கும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட Postamatல் இருந்து பணத்தை எடுக்க முடியும்.

ஆனால் தபால் நிலையங்களுக்கு உள்ளே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால், பின்வரும் கால அட்டவணையின் அடிப்படையில் (குடும்பப் பெயர் தொடக்க எழுத்தின்படி – in base all’iniziale del cognome) பிரிக்கப்பட்ட அகர வரிசையை மதிக்க வேண்டும்:
-மார்ச் 26 வியாழக்கிழமை A முதல் B வரை ;
-மார்ச் 27 வெள்ளிக்கிழமை C முதல் D வரை;
-மார்ச் 28 சனிக்கிழமை காலை E முதல் K வரை;
-மார்ச் 30 திங்கட்கிழமை அன்று L முதல் O வரை;
-மார்ச் 31 செவ்வாய்க்கிழமை P முதல் R வரை;
-ஏப்ரல் 1 புதன்கிழமை S முதல் Z வரை.
மேலும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் ஓய்வூதியங்கள் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் வழங்கப்படும் என தொழில் அமைச்சர் Nunzia Catalfo கூறியுள்ளார்.
குறிப்பாக:
ஏப்ரல் மாத ஓய்வூதியம் மார்ச் 26 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படும்;
மே மாத ஓய்வூதியம் ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 30 வரை வழங்கப்படும்;
ஜூன் மாத ஓய்வூதியம் மே 26 முதல் மே 30 வரை வழங்கப்படும்.

இந்த வழியில், கொரோனா வைரசின் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க வயதானவர்கள் மற்றும் தபால் நிலையங்களில் பணிபுரிபவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உங்கள் கவனத்திற்கு