இத்தாலி: உயிரிழந்தவர்களின் தொகை சீனாவின் எண்ணிக்கையை விட அதிகம்.

இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 19-03-2020 இன்று வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி நேற்றிலிருந்து 427 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள் (+10,3%). மொத்தமாக இத்தாலியில் உயிரிழந்தவர்களின் தொகை 3,405. இன்று வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள். சீனாவில் இன்றுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 3,245.

அவசரகால நெறிமுறைகளின் விளைவுகள் ஏறத்தாழ வருகின்ற வாரத்தில் தான் எதிர்பார்க்கப்படுகின்றன. பரவுதலின் உச்சக் கட்டத்தை இந்த ஞாயிறு அடைவோம் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இன்றும் பரவுதலின் வேகம் குறையவில்லை (இன்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை +14,9% அதிகரித்துள்ளது).

ஐரோப்பிய நாடுகளும் நெருக்கமான நெறிமுறைகளை விதித்துக்கொண்டு வருகின்றன.

இத்தாலி பத்து நாட்களுக்கு முன்பு இருந்த நிலையில் தான் இன்று Germany, France நாடுகளின் பரவுதல் இருக்கிறது. ஆனால் அவர்களுடைய தொற்றுப்பரவுதலின் வேகமும் இத்தாலியின் தற்போதைய வேகமும் சமமாக இருக்கிறது. நெறிமுறைகள் கடைபிடிக்காவிட்டால் அங்கும் இத்தாலியின் சூழல் அமையலாம் என்று அச்சப்படுகிறது.
கீழே இணைக்கப்பட்டுள்ள விளக்கப்படத்தில் ஐரோப்பா நாடுகளின் தொற்றுநோய் வளைவை ஒப்பிட்டு பார்க்கலாம்.

உங்கள் கவனத்திற்கு