பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு.

கொரோனாவைரசு காலக்கட்டத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு.

தற்போது கொரோனவைரசு தொற்றினால் இத்தாலி முழுவதும் அவசரகால நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல குடும்பங்கள் ஒரு அசாதாரண நிலமைக்குள் தள்ளப்பட்டும் மற்றும் ஒரு புதிய மாற்றத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்க்கு ஆளாகியுள்ளனர். இதனால் பெரியோர்களும் இளம் சமுதாயத்தினரும் வீட்டுக்குள் இருக்கவேண்டிய சூழ்நிலையினால் நேரம், கவலைகள் மற்றும் சலிப்பை எப்படி கையாளுவது என்பது அவர்களுக்கு ஒரு முக்கியமான, கடினமான விடயமாக உள்ளது.

வேலை என்பது எமது சமூகத்திற்கு அடிப்படையான விடயம். விடுமுறையாக இருக்கட்டும் அல்லது வார இறுதியாக இருக்கட்டும் வேலைகள், பொறுப்புக்கள் கடமைகள் பின் ஓடிக்கொண்டே இருக்கிறோம் என்பது உண்மை.

பெரும்பாலும், ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரும் நாள் முழுவதும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள், அதேநேரம் பிள்ளைகள் தங்கள் பள்ளிக் கடமைகளில் ஈடுபடுவார்கள். ஆனால், இப்பொழுது நிலைமை மாறுபட்டுள்ளது. வீட்டில் உறுப்பினர்கள் அனைவரும் கூடுதலான நேரம் சேர்ந்தே இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலைக்குப் பழக்கப்படாததால் குடும்பத்தின் சமநிலை ஓர் ஆபத்தான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல் என்பது பெரியோர்களுக்கு மட்டுமல்லாமல் இளையோர்களுக்கும் சிறார்களுக்கும் மிகவும் கடினமானதொன்றாகும். இருப்பினும் இப்படிப்பட்ட ஒரு சூழலில் நாம் மனம் திறந்து வெளிப்படையாக பேசுவது அவசியம் ஆகும்.

சிறார்கள்: இந்த வைரசின் தாக்கம் பாடசாலைகளை மூட வேண்டிய கட்டாயத்தை ஏற்ப்படுத்தி அதற்குரிய வேறு வழிகளைத் தேடவும் செய்துள்ளது. இத்தாலிய உளவியல் நிறுவனத்தின் தலைவர் (SIP) Enrico Zanalda சொல்வது என்னவென்றால், ஆரம்பத்தில் சிறார்கள் பாடசாலைகள் மூடப்படுவதில் மகிழ்ச்சி அடையலாம், ஆனால் இவை அனைத்தும் ஒரு ஆபத்தான சூழலில் தான் நடைபெறுகின்றன.
மேலும், நாட்கள் செல்ல செல்ல, ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் பிரிவு அவர்களுக்கு ஒரு சுமையாகிப்போகின்ற வேளையில் பெற்றோர்கள் தான் அதனை தனிப்பட்ட முறையில் கையாளவேண்டும். ஆகையால், பாடசாலைகள் மூடப்படுவதின் உண்மைக் காரணங்களை இலகுவான வழியில் அவர்களுக்கு எடுத்துக் கூறும்படி பெற்றோர்களுக்கு ஆலோசிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையானது பிள்ளைகளின் அச்சத்தையும் தேவையற்ற கற்பனைகளையும் தடுக்கிறது.
குழந்தைகளுக்கு பெரியவர்கள் போல் நேரத்தை உணரும் ஆற்றல் இல்லை. மேலும், வழக்கமான வாழ்க்கை நடைமுறை ஒழுங்கு (routine) தடைப்படுதல் என்பது ஒரு விதமான உள இடர்பாட்டினை உருவாக்கக்கூடும் என்பதால் இதை தடுப்பது அவசியமாகும்.

குழந்தைகளுக்கு நாம் எவ்வாறு உறுதியளிக்க முடியும்?
இந்தக் கட்டம், குடும்ப வாழ்க்கையின் புதிய பரிமாணங்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பாகக் காணலாம் (குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுதல், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல்). இக் காலக்கட்டத்தில் பெற்றோர்கள் வெவ்வேறு பாத்திரங்கள் மூலம் தங்கள் பிள்ளைகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒன்றாக சமைப்பது, பல்வேறு கல்வி சம்மந்தமான ஆக்கச் செயல்பாடுகள் அல்லது மேசை விளையாட்டுகளில் அவர்களின் பள்ளித் தோழர்கள் போல் ஈடுபடுவது. (கட்டுரையின் முடிவில் ஒரு மேசை விளையாட்டு குறிப்பிட்டுள்ளோம்: பெயர்,பொருள், இடம்)

இளையோர்கள்: இளையோர்களுக்கு இந்த விடயம் வேறுபடும் ஏனென்றால் சமூக உறவு, நண்பர்கள், அவர்களை சந்தித்தல் என்பன அவர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான பங்காக அமைவதோடு குழு என்பது அவர்களிடம் முதன்மை பெருகின்றது.
இளமைப் பருவத்தில் தான் உங்கள் குழந்தைகளுடன் உகந்த உறவையும் நிலையான தொடர்புகளையும் பராமரிக்க மிகவும் கடினமான காலமாக அமைகின்றது. இந்த பருவத்தில் தான் பிள்ளைகள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான வளர்ச்சிகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

சேர்ந்து இருக்க வேண்டிய இக் கட்டாயச் சூழலில் தவறான புரிதல்கள் ஏற்பட சந்தர்ப்பங்கள் உண்டு.

ஒருபுறம் பிள்ளைகள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளத்தில் நாள் முழுவதையும் வீணடிக்கக்கூடும் என்று பெற்றோர்கள் அஞ்சக்கூடும், இதனால் பிள்ளைகளின் சில தனியுரிமைகளை மீறுவதற்கான சந்தர்ப்பமும் அமையலாம்.

மறுபுறம், சிலநேரங்களில் பிள்ளைகள் வீட்டில் பெற்றோரை ஒரு “நோட்டம் விடும் நபர்” ஆக பார்க்க முனைவார்கள்.

ஆகவே, ஒரு குறிப்பிட்ட நேரத்தை பகிர்வு மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் மற்றுமொரு குறிப்பிட்ட நேரத்தை படிப்புக்காகவும் (தனியாக அல்லது ஆசிரியர்களுடன் தொலைத் தொடர்பு மூலமாக) ஒதுக்கி ஒரு “தினசரி திட்டம்” ஊடாக செயல்படுத்தலாம்.
மேலும், சமீபக் காலங்களில் அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளையும் பிள்ளைகளின் தேவைகளையும் புரிந்து கொண்டு இவற்றுக்கு இடையில் பாதுகாப்பான மற்றும் முக்கியமான பங்கை பெற்றோர் வகிக்க வேண்டும். எனவே, எல்லாவற்றின் அடிப்படையிலும் ஒரு “பயனுள்ளத் தொடர்பாடல் ” உள்ளது. இது குழந்தைகளுக்கும் சரி இளையோர்களுக்கும் சரி இப்படியான ஒரு கால கட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றது.

கொரோனாவைரசு காலக்கட்டத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கிடையில் ஒரு தெளிவான தொடர்புக்கான விதிகள் யாவை?

இதற்கு முக்கியமான 3 விடயங்களை நாம் அவதானிக்க வேண்டும்.

பிள்ளைகளின் மனநிலை:
கதைக்கும் பொழுது பிள்ளைகள் சோர்வு நிலை அல்லது வேறு சிந்தனைகளில் இருந்தால் பெற்றோர் மீது கவனத்தை செலுத்துவது மிகவும் கடினம். இது ஏற்கனவே நாம் அறிந்திருந்தாலும், கூடுதலாக பொருத்தமற்ற தருணங்களை தேர்ந்தெடுப்பதால், எங்களின் உரையாடலுக்கான முயற்சி தோல்வி அடைகிறது.
சேர்ந்து இருக்கும் பொழுது அல்லது சேர்ந்து வேலைகள் செய்யும் தருணங்களே, உரையாடுதலுக்கு பொருத்தமாக இருக்கக்கூடும். உதாரணமாக சேர்ந்து உண்ணும் பொழுது அல்லது தொலைக்காட்சி பார்க்கும்பொழுது.

பெற்றோர்களின் மனநிலை:
பெற்றோர்களின் மன நிலையும் அதே அளவுக்கு முக்கியமானது, காரணம் நாங்கள் சோர்வாக, கவலையாக அல்லது விரக்தியடைந்து இருக்கும் பொழுது உரையாடுவது எதிர் பயனைத் தரக்கூடும். இந்த சந்தர்பங்களில் நாம் முக்கியமான விடயங்கள் விட்டு நுணுப்பங்களில் மீது எங்கள் கவனத்தை செலுத்த முனைவோம், வழக்கமாக நம்மை தொந்தரவு செய்யாத சிறிய விடயங்கள், நாம் தவறான மனநிலையில் இருக்கும் பொழுது, எங்களுக்கு சினம் ஏற்படுத்தக் கூடும். மேலும் பிள்ளைகள் எம்மை புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவர்கள் என்று கருதுவதற்கு வாய்ப்பு உண்டு.

கேட்டல்:
பயனுள்ள உரையாடலுக்கு கேட்டல் அவசியம். உரையாடுவது மற்றும் எங்களின் தேவைகளை பிள்ளைகளுக்கு புரிந்துகொள்ளவைப்பது முக்கியம், ஆனால் பிள்ளைகளை கவலையற்ற முறையில் பேசுவதற்கும், அவர்களின் உணர்வுகளை விமர்சிக்காது ஒரு உணர்வுபூர்வமான ஆதரவைப் பெறுவதர்கான விழிப்புணர்வுடன் அவர்களை பேச அனுமதிப்பது அதே அளவுக்கு அவசியம். எங்களின் கேட்கும் ஆற்றல் மீது பிள்ளைகள் நம்பிக்கை பெற்றால் தான், அவர்கள் எங்களுடன் அதிகம் பகிர முடியும். எங்களின் கோரிக்கைகளுக்கும், எங்களின் பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கும் இடையில் ஒரு சமரசம் அடைவது அவசியமாக உள்ளது, அதை நாங்கள் ஒன்றாக அடைவது இன்னும் முக்கியம்.

இந்த அவசரகால நெறிமுறைகள் முடிந்ததும், இந்த அனுபவத்திலிருந்து நாம் எதை பெற்றுக்கொள்வோம்?
நம்பிக்கை மற்றும் உற்சாகத்தின் ஒரு வடிவத்தை, விழிப்புணர்வு மற்றும் பொறுப்பின் அணுகுமுறையின் அடிப்படையில் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம்.
இப்போது நாம் பேரதிர்ச்சிக்குள் உள்ளாகியிருக்கின்றோம், அடுத்ததாக இந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வரும் ஒரு கட்டம் நமக்கு காத்திருக்கிறது.
ஒரு நவீன உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருந்த எமக்கு இந்த நோயால் மனிதர்களின் பலவீனத்தை கண்முன் அறியக்கூடியதாக இருக்கிறது. இந்த காலகட்டம், நாம் தனி நபர்கள் என்பதையும் தாண்டி, நாங்கள் ஒரு சமூகம் என்பதை நமக்குப் புரிய வைத்துள்ளது. மேலும், இந்த அனுபவத்திற்கு பிறகு, வாழ்க்கையை அதிகமாக மதிக்க எமக்குத் தோன்றும்.

கொரோனாவைரசு காலக்கட்டத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு.

விளையாட்டு – பெயர், பொருள், இடம்

ஒவ்வொரு நெடுவரிசையும் ஒரு வகைக்கு சமமான ஒரு அட்டவணையை வரைய வேண்டும். (எ.கா. பெயர்கள், பொருட்கள், இடங்கள், பிரபலமான நபர்கள், திரைப்படங்கள் …), வரிசைகள் விளையாடிய பந்தையத்துக்கு சமமானவை, இறுதி நெடுவரிசை மதிப்பெண்ணுக்கு உபயோகிக்கப்படும். விளையாடும் ஒவ்வொரு நபரும் (ஒவ்வொரு சுற்றிலும்) எழுத்துக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நபரும் அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களை அந்தந்த வகைகளில் எழுத வேண்டும்.
முதலில் வரியை நிரப்பிய நபர் 10 வினாடிகளை சத்தமாக எண்ணி, “நிறுத்து!’ எனக் கூற வேண்டும். அடுத்ததாக புள்ளிகளின் கணக்கீட்டைத் தொடங்க வேண்டும்.
புள்ளிகளின் கணக்கீடு:

  • 20 புள்ளிகள், சொல் சரியாக இருந்தால், மற்றும் வேறு யாரும் அந்த வகைக்கு கண்டுபிடிக்கவில்லை என்றால்.
  • 10 புள்ளிகள், சொல் சரியாக இருந்தால், வேறு யாரும் அதைப் பயன்படுத்தவில்லை என்றால்.
  • 5 புள்ளிகள், சொல் சரியாக இருந்தால், அது மற்றொரு நபரால் பயன்படுத்தியிறுந்தால்.

உங்கள் கவனத்திற்கு