Genovaவில் Remdesivir மருந்து சிகிச்சையுடன் 79 வயது நபர் குணமடைந்தார்

Genovaவில் Remdesivir மருந்து சிகிச்சையுடன் 79 வயது நபர் குணமடைந்தார்
Genovaவில் மருத்துவமன பிரதான மருத்துவர் Matteo Basetti

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 79 வயது நபருக்கு 7அம் திகதி மார்ச்சில் இருந்து Remdesivir மருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு இன்று முழுமையாக நோயில் இருந்து மீண்டுள்ளார்.

Remdesivir என்பது Ebola மற்றும் Marburg வைரசுக்கு எதிரான சிகிச்சைகளுக்கு கண்டுபிடிக்கப்பட்ட மருந்து.

“இந்த மருந்து சிகிச்சையுடன் முதலாவது குணமடைந்தவர் இவர் தான்” என்று Genovaவில் இருக்கும் Policlinico San Martino மருத்துவமனயின் பிரதான மருத்துவர் Matteo Basetti கொரோனா வைரசு சம்மந்தமான பத்திரிகை சந்திப்பில் தெரிவித்தார்.

“வைரசு இருப்பதை உறுதி செய்யும் இரண்டு சோதனைகளிலும் இவருக்கு தொற்றுநோய் இல்லை என்பது முடிவு கிடைத்துள்ளது. இந்த செய்தி எங்களுக்கு மிக உற்சாகம் தருகிறது. வேறு நபர்களுக்கும் Remdesivir சிகிச்சை அளிக்கப்படுகிறது.”

உங்கள் கவனத்திற்கு