“கர்ப்பக்காலம் அல்லது தாய்ப்பாலூட்டும் காலத்தில், தாயிலிருந்து குழந்தைக்கு வைரசு பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.”.

பரிசோதிக்கப்பட்ட முதல் 19 கர்ப்பிணிப் பெண்களிலோ, அல்லது COVID-19 ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கும் கொரோனா வைரசு தாக்கத்திற்க்குரிய அறிகுறிகள் உடைய, தாய்மார்கள் இருந்து பிறந்த குழந்தைகளிலோ, வைரசு பனிக்குட நீர் ( liquido amniotico) மற்றும் பிறந்த குழந்தையின் இரத்தத்தில் கண்டறியப்படவில்லை. SARS-COV-2 வைரசு தாயில் இருந்து குழந்தைக்கு பரவும் என்பதற்க்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
தாய் நோயறிதல் சோதனைகளை மேற்கொண்டால், அல்லது COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது மருத்துவ நிலைமைகள் அனுமதித்தால், தாய்ப்பாலூட்டுவதைத் தொடங்கலாம் அல்லது தொடரலாம்.

SARS-CoV-2 க்கு எதிரான தடுப்பூசி மற்றும் புதிய கொரோனா வைரசின் நோய்க்குறியீட்டிற்கு, கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் பாதிக்கப்படுவது பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில், கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது, எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்க்கான தரவுகள் சுகாதாரத் துறையில் (ISS) இருந்து தரப்படுகின்றன. முதலாவது முன்னெச்சரிக்கையாக நன்றாக கைக்கழுவுவது மற்றும் நோய்க்குட்பட்டவர்கள் அல்லது சந்தேகத்திற்க்குள்ளானவர்களுடன் தொடர்புகளை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை சுகாதாரத் தூதரகம் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்றன (கர்ப்பிணிப் பெண்களின் தொடர்புகளுக்கும் குறிக்கும்).

ஒரு நபர் இன்னொரு நபரிடம் நேரடி தொடர்புமூலமாக உமிழ்நீர், இருமல் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் தும்மல் வாயிலாக, மற்றும் அசுத்தமான கைகளால் (இன்னும் கழுவப்பட்டத கைகள்) வாய், மூக்கு அல்லது கண்களை தொடுவுவதாலும் SARS-CoV-2 வைரசின் பரவுதல் ஏற்படலாம்.

முதல் 19 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் COVID-19 இன் மருத்துவ அறிகுறிகளிருந்த தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளில், பனிக்குட நீர் (Liquido amniotico) மற்றும் தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்பட்ட பிறந்த குழந்தையின் இரத்தத்தில் வைரசு கண்டறியப்படவில்லை.
தற்போதைக்கு SARS-COV-2 வைரசின் செங்குத்து பரவலுக்கான எந்த ஆதாரமும் இல்லை.

இவ் அனுமானங்கள் மூலம், சந்தேகிக்கப்படும் SARS-CoV-2 தொற்று அல்லது COVID-19 மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுகாதாரத் துறை வழங்கும் (ISS) எச்சரிக்கைகள் என்னவென்று பார்ப்போம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு
யோனிப் பிறப்பு அல்லது அறுவைச்சிகிச்சை செய்வதற்கான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், தற்போதைய நிலையில், தாய் மற்றும் கருவுக்கான குறிப்பிட்ட மருத்துவ எச்சரிக்கைகள் இல்லையென்றால், SARS-CoV-2 தொற்றுக்கு உள்ளாக்கியதாக சந்தேகம் இருக்கும் பெண்களுக்கும் அல்லது COVID-19 நோய்த்தொற்று உள்ள பெண்களுக்கும், அறுவைச்சிகிச்சையை தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாகத் தெரியவில்லை.
மருத்துவமனை நிர்வாகத்தைப் பொறுத்தவரை நோய் தொற்றியிருப்பதாகச் சந்தேகம் உள்ளவர்களுக்கும் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடவடிக்கைகளின் அடிப்படையில், தேவைப்பட்டால், தாய் மற்றும் குழந்தையையும் தனிமைப்படுத்துவதற்கான முடிவுகள் மருத்துவர்கள் எடுக்கலாம்.
இவ்வாறான நடவடிக்கையில் இருந்து வரக்கூடிய அபாயங்கள் மற்றும் நன்மைகளை தாயுடன் சேர்ந்து கவனமாகப் பரிசீலித்த பின்பு மருத்துவமனையின் குழுவினர் இந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தருணம்
இந்த நேரத்தில் கிடைக்கும் அறிவியல் தகவல்கள் மற்றும் தாய்ப்பாலின் பாதுகாப்பு சக்திகளை கருத்தில் கொண்டு, நோய் கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது Covid-19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தாயாக இருந்தால், அவரது மருத்துவ நிலை அனுமதித்தால் மற்றும் அவர் விரும்பினால், நேரடி மார்பகப் பால் அல்லது மார்பகத்தால் பிழிவப்பட்டப் பாலை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் தாய்ப்பாலில் இதுவரை கோவிட்-19 வைரசு கண்டறியப்படவில்லை என்று கூறவேண்டும். சார்ஸ்-CoV-2 வை எதிர்ப்பதற்கான எதிர்சக்திகள் குறைந்தது ஒரு நபரின் உடலில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, குழந்தைக்கு வைரசு பரவும் அபாயத்தைக் குறைக்க, கைகளைக் கழுவுவது , பால் கொடுக்கும் போது முகத்திரை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரைக்கின்றது.
தாயும் குழந்தையும் தற்காலிகமாக பிரிந்து இருக்க வேண்டும் என்றால், கைகள் மூலம் அல்லது இயந்திரப் பிழிதல் மூலம் தாய்ப்பாலை பெறுவதற்கு உதவ வேண்டும்.
கைகள் மூலம் அல்லது இயந்திரங்கள் மூலம்
பால் பிழிவதற்கு கூட, சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு