இத்தாலி செனோவாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2024

செனோவா பிராந்தியத்தில்
இனத்தின் விடுதலைக்காகவும் நிலத்தின் உரிமைக்காகவும் போராடிய இனம், தொகுதி தொகுதியாகக் கொன்றொழிக்கப்பட்ட காலம் ஈழத் தமிழர்களால் மறக்க முடியாத வடு என்ற கோரிக்கையுடன் 18/05/2024
சனிக்கிழமை மாலை 15:00. மணிக்கு Via fieschi ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை வளாகத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகி Piazza Dante வீதி
வழி ஊடாக துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தபடி கோரிக்கைகளை எழுப்பிய வண்ணம் பதாதைகளைத் தாங்கியபடி பல ஆண்டுகள் கடந்தும் எம் இனத்துக்கு நீதி எட்டப்படாத நிலையில் சர்வ தேசத்திடம் நீதி கேட்டு பேரணியானது நடைப்பயணமாக Piazza Raffaele de Ferrari, 16121 Genova GE இடத்தில் முடிவடைந்தது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு