இத்தாலி பியல்லாவில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2024

முள்ளிவாய்க்கால் மே 18 இன், 15ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 18/05/2024 இன்று, இத்தாலி, பியல்லா மாநகரில் “முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்” என்ற பாடலுடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.

வல்திலானா நகரசபையின் அனுசரணையுடன் தமிழின அழிப்பு நினைவாக மரம் நாட்டப்பட்ட இடத்தில் எமது உறவுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட நினைவுக்கல் நினைவிடத்தில் (Piazza xxv aprile, Ponzone, Valdilana ) மதியம் 3.30 மணியளவில் Piemonte Consigliere Regionale Sean Sacco அவர்கள் பொதுச் சுடர் ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

தமிழீழத்தேசியக் கொடியினை எமது தேசிய செயற்பாட்டாளர் ஏற்றியதை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. வல்திலானா முதல்வர் Mario Carli அவர்கள் பிரதான ஈகைச்சுடரேற்றலை தொடர்ந்து சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன நடைபெற்றது. இத்தாலி மாநகரசபை உறுப்பினர்களின் உரைகள் மற்றும் திலீபன் தமிழ்ச்சோலை மாணவிகளின் முள்ளிவாய்க்காலில் எமது இனம் அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தும் நடனத்துடன் மாணவர்களின் இத்தாலி மொழியில் பேச்சும் இடம் பெற்றது.

இவ் வணக்க நிகழ்வில் தற்போதைய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் Tiziana Beghin எதிர்வரும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தளின் வேட்பாளர் Antonella Pepe மற்றும் வல்திலானா நகரசபை உறுப்பினர்கள் பல்வேறு இத்தாலி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களும் இத்தாலி பொது மக்களும் பங்கேற்றதோடு எமது இனத்தின் துயர்துடைக்க தங்களான பங்களிப்பை வழங்குவதாக அவர்களின் உரைகளூடாக உறுதிமொழியழித்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எமது மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் எம்தமிழ் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலுடன் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடல் இசைக்கப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

உங்கள் கவனத்திற்கு