ரெச்சியோ எமிலியாவில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்பட்ட தமிழர் விழா 2024

ரெச்சியோ எமிலியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இளையோர் அமைப்பினருடன் இணைந்து 14/01/ 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று “றிவால்டா” எனு‌ம் இடத்தில் பி. ப 16. 00 மணியளவில் சிறப்புற நடாத்திய தமிழர் விழாவானது இளையோர் அமைப்பினரின் தலைமையில் திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள் மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றலுடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின .

இந்தக் கலை நிகழ்வுகள் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு மிகவும் சிறப்பான தரமான நிகழ்வுகளாக தமிழர் விழாவில் மேடையற்றப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
வெறுமனே நடன நிகழ்வுகளாக மேடையேறிய தைத் திருநாள் விழாவானது 2024 இல் புதிய பரிணாமம் பெற்று நடனம், பண்ணிசை, வில்லிசை, நாடகம், சிறுவர் நடனம், என பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் தமிழர் விழாவானது கொண்டாடப்பட்டது.

உறியடித்தல் என்ற எமது பாரம்பரிய நிகழ்வு ஒன்றினை வளர்ந்து வருகின்ற எமது பிள்ளைகள் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளமை பாராட்டத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு இடம் பெற்றது. கலை நிகழ்வுகளைத் தந்த அனைத்துப் பிள்ளைகளுக்குமான பரிசளிப்பு இளையோர் அமைப்பினரால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து நன்றி உரையுடன் இரவு 20.00 மணியளவில் நிகழ்வுகள் நிறைவடைந்தன .
நன்றி

உங்கள் கவனத்திற்கு