இத்தாலி திலீபன் தமிழ்ச்சோலைகளில் தமிழர் திருநாள் 2024

இத்தாலி நாட்டில் வாழும் எம் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ்க் கல்வியை கொண்டு சேர்ப்பதையும்,மொழியின் இருப்பின் அகத்தியத்தை கருத்தில் கொண்டும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இளையோரிடையே தமிழ்க்கல்வியை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாது தமிழராகிய எமது பண்பாட்டை பேணுவதற்குமாக செயற்பட்டுவரும் திலீபன் தமிழ்ச் சோலைகளில் 21.01.2024 அன்று பொங்கல் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. திலீபன் தமிழ்ச் சோலைகளின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

மெய்யியல் இறைவழிபாட்டு நெறியிலிருந்து மாறுப்பட்ட தமிழரின் தனித்துவங்களை மட்டுமே சுமந்த விழாவான தமிழர் திருநாள் விழாவானது போலோனியா , செனோவா திலீபன் தமிழ்சோலைகளில் அப்பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் உறவுகளின் ஆதரவுடனும் முற்றத்தில் கோலமிட்டு விளக்கேற்றி காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகியது.

அந்நியக் காற்றுப்படாத தூய தமிழ்ப் பண்பாட்டுக்களங்களாகவே எம் களங்களை நம் எதிர்கால தலைமுறையினருக்கு கொடுக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளபடியால் சிறார்களின் கையால் அரிசி உலையிலிட்டு பால் எடுத்து பொங்கல் வைத்து கதிரவனுக்கு படையலிட்டு நன்றியறிதலைத் தெரிவித்து முடித்தபின் மாணவர்களின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின.

வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள் பாட்டு, பேச்சு கவிதை, நடனம், வில்லுப்பாட்டு,பட்டிமன்றம் ,சங்கீத கதிரை என களைகட்டி அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கலும் அதிதிறன் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் இடம் பெற்றதைத் தொடர்ந்து நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.

போலோனியா

செனோவா

உங்கள் கவனத்திற்கு