இத்தாலி வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் இடம்பெற்ற வெள்ள நிவாரணப்பணி

தற்போது நிலவிவரும் மோசமான காலநிலையால் ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் தமிழர் தாயகம் என்றுமில்லாதவாறு வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தாயக மக்கள் நாட்கூலித்தொழிலின்றி தற்காலிக வீடுகளில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.இந்த மக்களுக்குக் கரம் கொடுக்கும் நோக்கில் இத்தாலி உறவுகளின் நிதிப்பங்களிப்பில் வவுனியா மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உலருணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

ஓமந்தை 12 குடும்பங்கள். தரணிக்குளம் 13 குடும்பங்கள். மரக்காரம்பளை 12 குடும்பங்கள். இராசேந்திரங்குளம் 4 குடும்பங்கள். மறவன் குளம் 25 குடும்பங்கள். புளியங்குளம் 4 குடும்பங்கள்.

உங்கள் கவனத்திற்கு