இத்தாலியில்  நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 36 ஆவது நினைவு வணக்க நிகழ்வுகள்.

இத்தாலியில் பலெர்மோ,போலோனியா, பியல்லா, செனோவா,நாப்போலி நகரங்களில் தியாக தீபம் லெப். கேணல்  திலீபன் அவர்களுடையதும்,  தமிழீழத்தின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அவர்களுடையதும் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபம் நிறைந்த மக்களுடன் தியாக தீபத்தின் வணக்க நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.

 தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து லெப் கேணல்  திலீபன் அவர்களுடைய உருவப் படத்திற்கும் , கேணல் சங்கர் அவர்களுடைய உருவப் படத்திற்கும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு  மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. வருகைதந்திருந்த மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி தங்கள் வணக்கங்களைச் செலுத்திய பின்பு நிகழ்வுகள் ஆரம்பமானது.

உணர்வு பூர்வமாக அனைத்து நகரங்களிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதைகள், பேச்சுக்கள், அபிநய நடனங்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.போலோனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் போலோனியா ,ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் இணைந்து பங்கேற்று இருந்தனர் .

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறுகளை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து எமது செயற்பாட்டாளர்கள் இன்றைய தாயக நிலையையும்  எமது மாணவர்களுக்கு தமிழ் மொழியும் ,வரலாறும் எவ்வளவு முக்கியமானது என்பதனை எடுத்துரைத்தனர்.   “அடையாளம் காப்போம்” என திலீபன் தமிழ்ச்சோலை உயர் வகுப்பு மாணவர்களினால் இளையோர்களின் வழி நடத்தலில்  வாழிட மொழியில் மாதந்தோறும் இடம்பெற்றுவரும் வரலாற்று தொடரும் இடம்பெற்றது.

இறுதியில் தேசியக் கொடி கையளிக்கப்பட்டு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்” என்ற உறுதி மொழியுடன்  நிகழ்வுகள் நிறைவடைந்தன.

பலெர்மோ

போலோனியா

பியல்லா

செனோவா

நாப்போலி

உங்கள் கவனத்திற்கு