தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் 12 வயது மாணவன்

இன்று (24/05/2023) பியல்லா நகரில் Scuola Secondaria di primo grado (medie) di Triveroவில் தமிழின அழிப்பு தொடர்பாக சிறப்பு வகுப்பு இடம்பெற்றது.
இவ் வகுப்பினை தேசிய உணர்வுடன் இத்தாலிவாழ் 12 வயது மாணவன் செல்வன் சுதன் சுபிசன் ஒருங்கிணைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இம் மாணவன் கல்வி கற்று வரும் பியல்லா திலீபன் தமிழ்ச்சோலையில் தமிழின அழிப்பு வாரத்தில் இடம்பெற்ற தமிழின அழிப்பு தொடர்பான வகுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்றமையினைத் தொடர்ந்து, இத்தாலி பாடசாலையில் தன்னுடன் கல்வி கற்று வரும் சக மாணவர்களுக்கும் தமிழின அழிப்பு தொடர்பான விடையங்களை எடுத்து செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் தனது வகுப்பாசிரியருடைய ஒத்துழைப்புடன் பாடசாலை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று இளையோர் அமைப்பின் அனுசரணையுடன் ஒருங்கிணைந்த செயற்பாடு சிறப்பாக இடம்பெற்றது.

தாயகத்தில் ஐரோப்பியரின் வருகை முதல் தமிழின அழிப்பின் உச்ச கட்டமாகிய முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்பது வரை மேலும் இன்று வரை எவ்வாறு தமிழின அழிப்பு தொடர்கிறது என்பது பற்றியும் இவ் சிறப்பு வரலாற்று வகுப்பு இடம்பெற்றது. அனைத்து இத்தாலி வாழ் பல்லின மாணவர்களும், ஆசிரியரும் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் இவ் வகுப்பில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ் வகுப்பினை ஒருங்கிணைத்து சிறப்புற இடம்பெற செயற்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் உதாரணமாக திகழ்கிற இம் மாணவனுக்கு எங்கள் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு, இம் மாணவனைப் போன்று அனைவரும் தமிழின அழிப்பு தொடர்பான வகுப்புக்களை முன்னெடுத்து, எம் வரலாறு தொடர்பான விடையங்களை பரப்புரை செய்வதன் மூலம், தமிழின அழிப்புக்கான நீதியை பெறும் முயற்ச்சியில் ஈடுபட வேண்டும்.
எமக்கான நீதி இளையோர்களின் கைகளில் என்பதற்கான சிறப்பு எடுத்துக்காட்டாக இவ் வகுப்பு திகழ்கிறது.

உங்கள் கவனத்திற்கு